நான் முதல் தென்னிந்திய நடிகை!

"யூகன்', "திருட்டு விசிடி', "ஆத்யன்', "க க கா போ' உள்ளிட்ட படங்களின் கவனிக்கத் தக்க ஹீரோயினாக வலம் வருகிறார் சாக்ஷி அகர்வால்.
நான் முதல் தென்னிந்திய நடிகை!

"யூகன்', "திருட்டு விசிடி', "ஆத்யன்', "க க கா போ' உள்ளிட்ட படங்களின் கவனிக்கத் தக்க ஹீரோயினாக வலம் வருகிறார் சாக்ஷி அகர்வால். ஜீவனின் ஜோடியாக "ஜெயிக்கிற குதிரை' படத்தில் நடித்து வரும் சாக்ஷியுடன் ஒரு சாட்...

சினிமா பிரவேசம் குறித்து...?

எம்பிஏ பட்டதாரி. பேஷன், மாடலிங் பிடிக்கும். அதனால் சினிமாவும் பிடிக்கும். சினிமாவுக்கு  வந்தது வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. மருத்துவராக்க வேண்டும் என்பது என் அப்பா, அம்மாவின் ஆசை. நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று என்பது போல் சினிமாவுக்கு வந்து விட்டேன். என் முடிவுக்கு குடும்பத்தில் ஆதரவு கிடையாது. என் பிடிவாதத்தை உணர்ந்து ஒப்புக் கொண்டார்கள். விளம்பரம், மாடலிங் என சுற்றிக் கொண்டிருந்த நான் இப்போது முழு நேர சினிமா நடிகையாகி விட்டேன். 

இப்படி நினைத்தவுடனே ஹீரோயினாகி விட முடியுமா...?

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபலமான நடிப்பு பயிற்சி பள்ளியான "லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர்' என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளியில் இணைந்து நடிப்பு பயிற்சி பெற்றேன். "மெத்தட் ஆஃப் ஆக்டிங்' என்ற நான்கு மாத படிப்பு. இந்த பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்ற முதல் தென்னிந்திய நடிகை நான்தான். ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூர், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் இங்கு நடிப்பு பயிற்சியைப் பெற்றவர்கள். இது எனக்கு முக்கியமான அனுபவம்.

அது என்ன மெத்தட் ஆஃப் ஆக்டிங்...?

நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நடவடிக்கையை உற்றுக் கண்காணித்து, அவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சுமொழி ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு, அதனை நம்முடைய நடிப்புத்திறனுடன் இணைத்து திரையில் வழங்குவது தான் மெத்தட் ஆஃப் ஆக்டிங். இதற்கு உடல் சார்ந்த பயிற்சி, மனம் சார்ந்த பயிற்சி, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய பயிற்சி என சில நுட்பமான விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். 

சரி, நீங்களும் வழக்கமான ஹீரோயின் போல்தான் வந்து போகிறீர்கள்..?

எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் என் பங்கைச் சரியாக கொடுத்திருக்கிறேன். அதில் எனக்கு திருப்திதான். அதே சமயத்தில் ஒரு கமர்ஷியல் முகம் இருக்கிறது. அத்துடன் நடிப்பு என்ற முகமும் இருக்கிறது. இந்த இரண்டு முகமும் ஒரு நடிகைக்கு தேவை.  அதில் நான் சரியாகவே பயணிக்கிறேன்.  

உங்களின் பொழுதுபோக்கு..?

மசாராட்டி ( maserati ) சூப்பர் காரில் நெடுஞ்சாலையில் வேகமாக பயணிப்பது மிகவும் பிடிக்கும்.  அமெரிக்காவில் இருக்கும் போது எனக்கு சொந்தமான இந்த காரில் பயணித்தபோது அதிகமான சந்தோஷத்தை அடைந்தேன். தற்போது அந்த காரை இங்கு கொண்டு வர இயலாததால் வருத்தமாகவும் இருக்கிறேன்.

-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com