டிப்ஸ்... டிப்ஸ்...

புதிய ஆடைகளில் சாயம் போகாமல் இருக்க, அந்த ஆடையை உப்பு கலந்த தண்ணீரில் நனைத்து பின்னர் துவைத்தால் சாயம் போகாது.
டிப்ஸ்... டிப்ஸ்...

* புதிய ஆடைகளில் சாயம் போகாமல் இருக்க, அந்த ஆடையை உப்பு கலந்த தண்ணீரில் நனைத்து பின்னர் துவைத்தால் சாயம் போகாது.
* வெள்ளி பாத்திரங்களை விபூதியை வைத்து தேய்த்தால்  பளபளப்பாக இருக்கும்.
* ரப்பர் பேன்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரை தூவினால் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
* கற்பூரத்துடன் சில மிளகுகளையும் போட்டு வைக்கவும் கற்பூரம் கரையாமல் இருக்கும்.
* வெள்ளை துணிகளை முதல்நாள் துவைத்துக் காயவிட்டு மறுநாள் நீலம் போட்டால் மிகவும் வெண்மையாக இருக்கும்.
- பி.கவிதா
* வாரம் இரு முறை நம் வீட்டில் சாம்பிராணி புகைபோட்டால் வீட்டில் ஒட்டடை பிடிக்காது.  அதை சுவாசிக்கும்போது நமக்கும் நீர்கோர்வை இருந்தால் சரியாகும்.
* கொசு கடித்த உடன் சிலருக்கு அரிப்பு ஏற்படும்; அரிக்கும்  இடத்தில் வேப்பிலையை அரைத்து தடவினால் அரிப்பு 5 நிமிடத்தில் குணமாகும்.
* எந்த பழம் வாங்கினாலும் சரி வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவியபின்னரே சாப்பிட வேண்டும். பழங்கள் கெடாமல் இருக்க  கெமிக்கல் ஸ்பிரே அடிக்கப்படுகிறது. அப்படியே சாப்பிட்டால் அல்சர் நிச்சயம்.
* வெள்ளரிச் சாற்றை கேரட் சாற்றுடன் கலந்து வாரம் நாலுநாள் சாப்பிட்டால் முகம் பொலிவு பெறும்.
* வெந்தயத்தை பாலிலோ தயிரிலோ அரைத்து தலைக்கு தேய்த்தால் பொடுகு, பேன் பிரச்னையே இருக்காது.
- பொ.பாலாஜி 
* தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம். ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.
* டீத்தூளை சிறிது நேரம் வெளியில் உலரவிட்டு பிறகு டீ தயாரித்தால் டீ மணத்துடனும் சுவையாகவும் இருக்கும்.
* காய்ந்த ரொட்டியைத் தூக்கி ஏறியாமல் நீராவியில் வேக வைத்தால் புது ரொட்டி போல் ஆகிவிடும்.
* இளநீர் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்துவிட்டுச் சாப்பிட தாகம் தணியும்.
* எலுமிச்சம் பழச்சாறுடன் பனைவெல்லாம் சேர்த்துச் சாப்பிட நெஞ்சு எரிச்சல் நீங்கும்.
* எலுமிச்சம் பழத்தைச் சுவைத்துச் சாப்பிட வாந்தி நிற்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றுடன் மூன்று மிளகை வைத்து அரைத்து பற்றுப் போட தலைவலி குணமாகும்.
* மோரில் எலுமிச்சை சாறு சேர்த்துச் சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
- நெ.இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com