கறுப்புதான்  எனக்குப்  பிடிச்ச கலரு..!

அழகு  என்று  வரும்  போது   முதலாவதாக  முன்வைக்கப்படுவது  தோல் நிறம் தான். நல்ல எலுமிச்சை நிறமாகவும்,
கறுப்புதான்  எனக்குப்  பிடிச்ச கலரு..!

அழகு  என்று  வரும்  போது   முதலாவதாக  முன்வைக்கப்படுவது  தோல் நிறம் தான். நல்ல எலுமிச்சை நிறமாகவும்,  சிவப்பு   நிறமாகவும் இருந்தால் தான் அழகு, கறுப்பு என்றால் அழகு இல்லை என்று விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த கறுப்பு  நிறத்தில்   மறைந்திருக்கும்  லட்சணம் பல பேருக்கு தெரிவதில்லை.  தோல் நிறத்தினை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கலைத்துறை மற்றும் மாடலிங் துறையில் சாதனை படைத்தவர்கள் ஏராளம். இதற்கு  ஒரு  சமீபத்திய  உதாரணம்   இதோ:
இந்த  விமர்சனங்களால்  கெளடியா மனதளவில் பாதிக்கப்பட்டாலும், தனது தோல் நிறத்தை  முன்னிலைப்  படுத்தி    மாடலிங் துறையில் தற்போது முன்னணி  அழகியாக   வளர்ந்துள்ளார் . 
செனகல்    நாட்டைச்  சேர்ந்தவர் கெளடியா 19 வயது. தற்போது பள்ளியில் படித்து வந்தாலும், இவரின் தோல் நிறத்தை பார்த்த மாடலிங் நிறுவனம் ஒன்று மாடலிங்காக இவரை ஒப்பந்தம் செய்தது. கடந்த 3 ஆண்டுகளாக  கெளடியா மாடலிங் துறையில் கலக்கி வருகிறார். 
"மற்றவர்கள் எனது தோல் நிறத்தை கிண்டல் செய்தாலும், எனது அழகை அதிகம் நேசிக்க கற்றுக்கொண்டேன், மற்றவர்கள் கூறும் எதிர்மறையான வார்த்தைகளை ஒருபோதும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆமாம்  கறுப்புதான்  எனக்குப்  பிடிச்ச   கலரு..
அதனால் தான் என்னால் மாடலிங்  உலகில் சாதிக்க முடிந்தது'' என கெளடியா கூறியுள்ளார். கெளடியாவின்   இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2,50,000 பேர் பின் தொடர்கிறார்கள். இதுதான்  கெளடியாவின்  வெற்றி.. கறுப்பின்  வெற்றி!
- ஏழிசை எழில் வல்லபி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com