சமையல் டிப்ஸ்!

குருமா நீர்த்துவிட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்ûஸப் போட்டு கொதிக்கவிட்டால், நன்றாக கெட்டிப்பட்டுவிடும்.
சமையல் டிப்ஸ்!

* குருமா நீர்த்துவிட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்ûஸப் போட்டு கொதிக்கவிட்டால், நன்றாக கெட்டிப்பட்டுவிடும். ருசியும் அதிகமாகும்.
* தயிர் புளிக்காமலிருக்க ஒரு கீற்று தேங்காயைக் கீறிப் போட்டு வைத்தால் போதும்.
* பூண்டை சூடான குக்கர் அல்லது தோசைக் கல்லில் வைத்தால் சுலபமாக தோலுரிக்கலாம்.
* வெந்தயக் குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டால் அந்தக் குழம்பின் சுவையோ தனி.
* பட்டாணி சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரைச் சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.
* அரிசி உப்புமா செய்யும்போது அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கலந்து பின் செய்தால் உப்புமா வாசனையாக இருக்கும்.
- கே.பிரபாவதி
* தக்காளி சூப்பில் போட  பொரித்த கார்ன் ஃப்ளேக்ஸ்  துண்டு இல்லையெனில் ஜவ்வரிசி வடாம் இருந்தால் பொரித்து சூப்பில் போட்டு சாப்பிடலாம். 
* உளுந்து வடை செய்யும்போது அரைத்தமாவுடன் சிறிது ஊற வைத்த பயத்தம் பருப்பைச் சேர்த்து கலந்து வடை செய்தால் வடை மெதுமெதுவென்றும் சுவையாகவும் இருக்கும். 
* இரண்டு தேக்கரண்டி உளுந்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து பஜ்ஜி செய்யும் மாவில் கலந்து பஜ்ஜி செய்தால் வித்தியாசமான சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும்.
- ஆர்.மீனாட்சி
* மீதமான தேங்காய் சட்னியைக் கெட்டியானப் புளிப்பு மோரில் கலந்து கொதிக்க வைத்தால் மோர் குழம்பு ரெடி.
* பழைய சாதத்தை மிக்சியில் அரைத்து ரவை, மைதா கலந்து கடுகு, மிளகாய், வெங்காயம் தாளிதம் செய்து வார்க்கும் தோசை புதுமாதிரியாக இருக்கும்.
- தேவிகா சபாநாயகம்
* வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்துவிட்டால் சாம்பார் வாசனை தூக்கலாக இருக்கும்.
* கீரை மசியல் செய்யும் போது சிறிது சாதம் வடித்த கஞ்சியை விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும்.
* தேங்காய் சேர்க்காமல் வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.
- பி.பாலாஜிகணேஷ்
* எந்த துவையல் செய்தாலும் அதனோடு கடைசியில் வறுத்த எள்ளைச் சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். எள் உடம்புக்கும் 
நல்லது. 
* மூன்று கப் பொட்டுக் கடலை, ஒரு கப் சர்க்கரை ஐந்து ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் நைஸôகப் பொடித்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது கொஞ்சம் எடுத்து பால்கலந்து உருண்டை பிடித்துச் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com