சமையல்...சமையல்...

இது மெக்சிகன் காலை உணவு. கோதுமை, மைதா, சோள மாவு, இதில் ஏதேனும் ஒரு மாவை எடுத்து சப்பாத்தி போல் திரட்டி

வெளிநாடுகளின் பிரபல உணவு வகைகளின் குறிப்புகளை இங்கே நம்முடன்
பகிர்ந்து கொள்கிறார் பிரபல சமையல் கலைஞர் ஸ்ரீ பெரியகருப்பன். 

கெஸடியா 

இது மெக்சிகன் காலை உணவு. கோதுமை, மைதா, சோள மாவு, இதில் ஏதேனும் ஒரு மாவை எடுத்து சப்பாத்தி போல் திரட்டி உள்ளே காய்கறிகள் கலந்த பூரணத்தை வைத்து மூடி தோசைக்கல்லில் லேசாக சூடு செய்தால் "கெஸடியா' ரெடி.  ஒரு சப்பாத்தி மேல் பூரணத்தை வைத்து அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து மூடி, சூடு செய்தும் சாப்பிடலாம். 
தேவையான பொருட்கள்:
தயார் செய்து வைத்துள்ள 
சப்பாத்தி -   1 
மீல் மேக்கர் (பொடித்து, 
வேகவைத்து நீர் வடித்தது) - அரை கிண்ணம்
வெங்காயம் - 1 
பூண்டு - 1 பல்
பச்சை மிளகாய் - 2
வேகவைத்த சோள முத்துகள் - தேவையான அளவு
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
காய்ந்த கற்பூரவல்லி இலை பொடி - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப  
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
நறுக்கிய லெட்டூஸ் இலை (கங்ற்ற்ன்ஸ்ரீங்)- 1
சீஸ் - தேவைக்கேற்ப
தக்காளி சாஸ் - தேவைக்கேற்ப
 ( 1-2 தக்காளியை வேகவைத்து, தோல் உரித்து, மிக்ஸியில் அடித்து சிறிது கரம் மசாலா சேர்த்தால் "தக்காளி சாஸ்' ரெடி.
செய்முறை:   வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், பூண்டு பல், நறுக்கிய  வெங்காயம், சோள முத்துகளைப் போட்டு  வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மீல்மேக்கர் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், சீரகத்தூள், காய்ந்த கற்பூரவல்லி, மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கியதும் செய்து வைத்துள்ள தக்காளி சாûஸ சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தவாவில் சூடு செய்த சப்பாத்தியின் பாதி பகுதியில் வதக்கிய காய்கறிகளைப் போட்டு, அதன் மேல் பொடியாக நறுக்கிய லெட்டூஸ் இலைகளைத் தூவி, பிறகு அதன்மேல் சீஸ் துருவலை தூவி சப்பாத்தியின் மற்றொரு பகுதியால் மூடி, லேசாக சூடு செய்து, மறுபுறமும் லேசாக திருப்பி சூடு செய்து, சாஸýடன் சாப்பிடவும்.
( மீல் மேக்கர் கிடைக்கவில்லை என்றால் வேகவைத்த சிக்கன் கொத்துக் கறி அல்லது பனீர் உபயோகிக்கலாம்).
பான் கேக்ஸ் 

இது அமெரிக்கன் காலை உணவு. இந்த கேக்கை முழுவதும் மைதாவிலேயே செய்யலாம். அல்லது முக்கால் பாகம் மைதா, கால் பாகம் கோதுமை மாவு சேர்த்து செய்யலாம். அல்லது அரை பாகம் மைதா, அரை பாகம் கோதுமை மாவு சேர்த்தும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கிண்ணம்
லவங்கப்பட்டை சர்க்கரை - 4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 பின்ச்
(மேலே உள்ள அனைத்து பொருள்களையும் தண்ணீர் சேர்க்காமல் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து தனியே வைக்கவும்)
பால் - 1 கிண்ணம்
தயிர் - 1 தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: பால், தயிர், வெண்ணிலா எசன்ஸ் மூன்றையும் கலந்து நன்றாக அடித்து,  அவற்றுடன் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றோடு நன்றாக அடித்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.  (இந்த மாவை கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.) தவாவை அடுப்பில் வைத்து லேசாக  வெண்ணெய் ஊற்றி சூடேற்றி ஒரு கரண்டி மாவை கல்லில் ஊற்றவும். ஊற்றிய மாவை கரண்டி வைத்து பெரிதாக தேய்க்காமல் ஊத்தப்பம் போன்று கனமாக இருக்கும்படி வேகவிடவும். பின்னர் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். அதில் நடுவில் வெண்ணெய் தடவி சாப்பிடவும்.
 குறிப்பு :  லவங்கப்பட்டை சர்க்கரை கிடைக்காவிட்டால் கால் கிண்ணம் சர்க்கரையில் 2 லவங்கப்பட்டை சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
பான் கேக்கை மேப்பல் சிரப், தேன், ஆரஞ்சு சாஸ் அல்லது கேரமல் க்ரீம் சாஸýடன் பரிமாறலாம். சுவையாக இருக்கும்.
ஜாலா ரொட்டி

இது மலேசியாவில் குழந்தைகளுக்கான  மாலை உணவு.
தேவையான பொருட்கள்:
மைதா - 1ணீ  கிண்ணம்
முட்டை - 1
தேங்காய்ப்பால் - முக்கால் கிண்ணம்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள், உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு தோசை மாவு பதத்துக்கு தயார் செய்து 3 நிமிடங்கள் வைக்கவும். (தேவைப்பட்டால் நீர் சேர்க்கலாம்).
மீடியம் சைஸில் உள்ள ஜல்லடையை எடுத்து, மாவை அதில் ஊற்றவும். (கட்டிகள் இல்லாமல் இருப்பதற்கு இதுபோன்று வடிக்கட்டிக் கொள்ளவும்)
தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் போட்டு உருகியதும், காலியான சாஸ் பாட்டிலில் வடிகட்டிய மாவை ஊற்றி  வலை மாதிரி தோசையை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இந்த வலை தோசைக்கு தொட்டுக் கொள்ள  சிக்கன், மட்டன், மீன் குழம்பு ருசியாக இருக்கும். ( பார்ப்பதற்கு கடினமாக தோன்றும். ஆனால் செய்வது மிகவும் எளிது. )
குறிப்பு: மைதா மாவிற்கு பதில் கேழ்வரகு மாவு அல்லது கோதுமை மாவு உபயோகிக்கலாம்.
ஹம்மஸ் சட்னி

 இது மெடிட்டரேனியன் நாட்டின் சட்னி தேவையான பொருட்கள்:
ஊற வைத்து வேக வைத்த கொண்டைக்கடலை - 2 கிண்ணம்
வெள்ளை எள் பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
ஒன்றிரண்டாக பொடித்த மிளகாய் வற்றல் தூள் (சில்லி ஃப்ளேக்ஸ்) - கால் தேக்கரண்டி
ஹாட் சாஸ் - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஆலிவ் ஆயில் ஊற்றி விழுது பதத்திற்கு அரைக்கவும். சில்லி ஃப்ளேக்ஸ் கிடைக்காவிட்டால், மிளகாய் வற்றலை வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்த கொண்டைக்கடலை, எள் விழுது, பூண்டுப் பல், பொடித்த மிளகாய் வற்றல், ஹாட் சாஸ், உப்பு, எலுமிச்சைச் சாறு, தேன் ஊற்றி அரைக்கவும். ஹம்மஸ் சட்னி ரெடி. சாப்பத்தி, நான், பரோட்டாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: சிவப்பு குடைமிளகாயை அவனில் வைத்து சுட்டு எடுத்து, தோல் உரித்து, ஹம்மஸ் சட்னியுடன் சேர்த்து அரைக்கலாம். சுவை மேலும் கூடுதலாக இருக்கும். மிக்ஸியில் கொண்டைக்கடலை அரைக்கும்பொழுது ஆலிவ் எண்ணெய் அல்லது நீர் சேர்த்து அரைக்கலாம். கண்டிப்பாக மற்ற எண்ணெய்களை ஊற்ற வேண்டாம். சட்னியின் சுவை மாறிவிடும்.
கொத்துமல்லி பெஸ்டோ

இது அமெரிக்கன் சட்னி
தேவையான பொருட்கள்:
கொத்துமல்லி தழை - 1 கட்டு
முந்திரி - அரை கிண்ணம்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
நறுக்கிய பூண்டு - 2 பல்
ஆலிவ் எண்ணெய் - அரை கிண்ணம்
பச்சை மிளகாய் - 1
பார்மஷான் சீஸ் - 1 தேக்கரண்டி
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை: மிக்ஸியில் முந்திரி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லி இலை, மிளகுத்தூள், உப்பு இவற்றுடன் தேவையான ஆலிவ் எண்ணெய் ஊற்றி அரைக்கவும்.  இதை அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்றாமல், அதற்கு பதில் ஆலிவ் எண்ணெய் மட்டும் விட்டு அரைக்கவும். இறுதியாக " பார்மஷான் சீஸ்'  சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இந்த சட்னியை சமைத்த பாஸ்தாவுடன் சேர்த்து சாப்பிடலாம். 
குறிப்பு: 
* ப்ரெட் சாண்ட்விச் செய்யும் பொழுது பிரெட்டில் இதை தடவி காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
* வடித்த சாதத்தில் இந்த சட்னியை இரண்டு கரண்டி போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
* கொத்துமல்லி இலைக்குப் பதில் திருநீற்றுப்பச்சிலை இலையிலும் இந்த சாஸை செய்யலாம்.
* பார்மஷான் சீஸ் இல்லையென்றால் பிட்ஸா சீஸ் சேர்க்கலாம்.
சமையல் ராணிகளின் கவனத்திற்கு!
வித்தியாசமாக, வித விதமாக சமையல் செய்வதில் வல்லவரா?
அப்படியானால், உங்களது சமையல் குறிப்புகளையும், அவற்றிற்கான புகைப்படங்களையும் அனுப்புங்கள். சிறந்தவை பிரசுரிக்கப்படும். சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. உங்களுடைய புகைப் படத்தையும் தவறாமல் அனுப்பி வையுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
தினமணி மகளிர்மணி
எக்ஸ்பிரஸ் கார்டன், 29,2வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,  
சென்னை - 600 058.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com