தனியே ஒரு பாத யாத்திரை!

பெண்களைப்  பொறுத்த மட்டில் மார்பகப் புற்றுநோய் அபாயம்  எப்பொழுது வருமென்று  சொல்ல முடியாது.
தனியே ஒரு பாத யாத்திரை!

பெண்களைப்  பொறுத்த மட்டில் மார்பகப் புற்று நோய் அபாயம்  எப்பொழுது வருமென்று  சொல்ல முடியாது. இந்த அபாயத்தைத் தவிர்க்க  விழிப்புணர்வு தேவை. மார்பகப் புற்று     நோய்  அபாயம்  குறித்த  விழிப்புணர்வு பெண்களிடையே ஏற்பட வேண்டும் என்பதற்காக  நீலிமா  என்ற பெண்மணி 350 கி.மீ. காலணி ஏதும் அணியாமல் விஜயவாடாவிலிருந்து  விசாகப்பட்டணம் வரை பாத யாத்திரை செய்திருக்கிறார்.  

விஜயவாடாவிலிருந்து  நீலிமா விசாகப்பட்டணம் போய்ச்  சேர எட்டு  நாள்கள் கால் நடைப்  பயணம்  செய்ய  வேண்டி வந்தது.  இந்த  பாத யாத்திரை செய்ய நீலிமா  ஐந்து மாதங்கள்  வெறும்  கால்களால்  ஓடி  பயிற்சி செய்திருக்கிறார்.  பாத யாத்திரையின்  போது  நீலிமாவை  பயமுறுத்தியது சாலையில்  நெளிந்து சென்ற கணக்கிலடங்காத  பாம்புகளாம்.

புள்ளி விவரங்களின்படி  சென்னை, பெங்களூர், மும்பை  நகரங்களில் 35 முதல் 44 வயது பெண்களுக்கு  மார்பகப் புற்று நோய் வரும் அபாயம்  உள்ளதாம்.

- ஏழிசை எழில் வல்லபி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com