பித்த வெடிப்பு நீங்க...

பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடம் மூழ்கவிடவும். பின்னர், பாதத்திற்கான ஸ்க்ரைப்பரைக் கொண்டு தேய்க்கவும். பின்னர்,
பித்த வெடிப்பு நீங்க...

* பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடம் மூழ்கவிடவும். பின்னர், பாதத்திற்கான ஸ்க்ரைப்பரைக் கொண்டு தேய்க்கவும். பின்னர், பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்ஸுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடம் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும்.
• பொதுவாக வெயிலிலும் சரி, பனியிலும் சரி பாதத்தை பாதுகாக்க பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது நல்லது. 
• பெரிய வாளியில் வெந்நீரை நிரப்பி, அதில் பாதங்களை முக்கிக் கொள்ளுங்கள். அதில், உப்பு, எலுமிச்சைச் சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்விட்டு, 20 நிமிடம் வரை பாதங்களை ஊற வைக்கலாம். பின், ஸ்க்ரைப்பரைக் கொண்டு, பாதங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளை தேய்க்கவும். 
• ஒரு தேக்கரண்டி நீர்க்காத கிளிசரின், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள். 
• பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, 2 தேக்கரண்டி அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் வினிகர் சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்து, பாதங்களில் உள்ள  பித்த வெடிப்புகள் மீது இரவு படுக்கும் முன் தடவி விடவும். பின்னர், காலையில் எழுந்து கழுவி விடவும்.
• பாதச் சருமம் வறண்டு காணப்பட்டால், வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம்  ஊற வைத்து கழுவிய பின், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யைக் காலில் தேய்த்துக் கொள்ளவும். அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும். பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்யைத் தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகள் விரைவில் மறைந்து நல்ல பலன் கிடைக்கும். 
 - து.கலைச்செல்வி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com