டிப்ஸ்... டிப்ஸ்...

ரசத்தில் புளியை குறைத்து,  மிளகு - சீரகப் பொடியை  கூடுதலாக சேர்த்தால் உடலுக்கு நல்லது.
டிப்ஸ்... டிப்ஸ்...

* சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு  முன்னால்  கையில் சிறிதளவு உப்பை தடவிக் கொண்டால் கையில் சப்பாத்திமாவு  ஒட்டாது.

* அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல்  செடிகளுக்கு  ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

* வெயில் காலத்தில் பெருங்காயம் கெட்டியாகிவிடும்  அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு  நீக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல்மிருதுவாக இருக்கும்.

* நெய் ஃப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத் துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

* இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம் காய்ந்த மிளகாய், கொத்துமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்துவிட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

* தோசை சுடும்போது தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம்  புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி அதை எண்ணெய்யில்  தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்து போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்துவிட்டு எண்ணெய்யில் பொரித்தால் நன்றாக பொரியும்.

* காராமணியை ஊற வைத்து அத்துடன் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், உப்பு  ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து வடை சுட்டு சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* ஜாங்கிரி செய்யும்போது பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு மேலே தயிர்  ஊற்றி, கொஞ்சம் உப்புப் போட்டு ஊற வைத்து சாப்பிட்டு பாருங்களேன். சூப்பர் ருசிதான்!

* வத்தக்குழம்பு  செய்யும்போது கடைசியாக மஞ்சள் மிளகுத் தூளைக் கலந்தால் குழம்பு ருசியாக இருக்கும்.
- சி. பன்னீர்செல்வம்

* இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தேன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

* ரசத்தில் புளியை குறைத்து,  மிளகு - சீரகப் பொடியை  கூடுதலாக சேர்த்தால் உடலுக்கு நல்லது.
- பொ. பாலாஜி

* பீட்ரூட், இஞ்சி, தேன், எலுமிச்சம் பழச்சாறு நீர் கலந்து மிக்ஸியில் அடித்து அருந்த - ரத்த விருத்தி, நெஞ்சு எரிச்சல் தரும்.

* பிரெட் துண்டில் ஓரத்தை  நீக்கிவிட்டு உதிர்த்து அதில் பேரீச்சை துண்டுகள், பன்னீர் துண்டுகள், தக்காளி கெட்சப் கலந்து உருண்டையாக்கி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான ஸ்நாக்ஸ் ரெடி. 
- ஆர். பிரபா, திருநெல்வேலி.  

* தேங்காய் சரிபாதியாக உடைய வேண்டுமா முதலில் தேங்காயை தண்ணீரில் நனைத்து பின்பு உடைக்க வேண்டும்.
- பி.பாலாஜிகணேஷ்

* இட்லி, தோசை மாவு புளித்துவிட்டால், அதில் சுக்குப் பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் எளிதில் ஜீரணமாகும்.
 - கே.பிரபாவதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com