ஆயிரம் கண்களுடன் விழித்திருக்கிறது சென்னை!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி " உளவுப் பார்வை'. சமூகத்தால் மறைக்கப்பட்டு
ஆயிரம் கண்களுடன் விழித்திருக்கிறது சென்னை!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி " உளவுப் பார்வை'. சமூகத்தால் மறைக்கப்பட்டு வரும் அவலங்களையும், பிரச்னைகளையும் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்படுத்தி வரும் நிகழ்ச்சி இது.

இந்நிகழ்ச்சி குறித்து இதனை தயாரித்து வழங்கும் சாந்தி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"தினந்தோறும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் வழக்கமான நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சி இது. பொதுவாக இங்குநம்மைச் சுற்றி நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்வென்றால் இதெல்லாம் பிரச்னை என்று புரிந்து கொள்ளாமல் வாழும் மக்களே இங்கு அதிகம். அந்த சிக்கலான பிரச்னைகளிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், விழிப்புணர்வு பெறவும் ஆதாரங்களுடன் இந்நிகழ்ச்சியின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

கல்விக் கட்டணக் கொள்ளை, உறைய வைக்கும் உடல் உறுப்புக் கொள்ளை, சென்னையில் பெருகி வரும் போதைப் பொருள் விற்பனை, திருநங்கைகளின் நிலை, பாலியல் தொழிலாளர்களின் வலி, கரகக் கலைஞர்களின் வாழ்வும் வலியும் போன்றவற்றைப் புலனாய்வு செய்து ஆதாரத்துடன் ஆவணப்படுத்தியிருக்கிறோம்.

அதுபோன்று தினந்தோறும் நாம் அருந்தும் பாலில் உள்ள கலப்படங்களைப்பற்றி ஒரு நிகழ்ச்சி தயாரித்திருந்தோம். அப்போது எங்களுக்குக் கிடைத்த தகவலை சேகரித்தபோது பச்சிளம் சிசு முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அருந்தும் பாலில் இத்தனை கலப்படமா? என்று அதிர்ச்சியில் உறைந்துபோனோம்.

கடந்த வாரங்களில் இரவு நேர சென்னையை மையப்படுத்தியிருந்தோம். அதில் சென்னையை தூய்மை படுத்தும் துப்புரவாளர்கள் பணி, அத்தியாவசியமான உணவான பால் விநியோகம், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் பத்திரிகை விநியோகம், வெளிமாநிலங்களிலிருந்து வரும் காய்கறிகளின் இறக்குமதி என தொழிலாளாளர்களின் உழைப்பு ஒரு பக்கம் இருக்க, இரவு நேரங்களில் நடக்கும் சமூக விரோதிகளின் நடமாட்டம் மற்றொரு புறம், போதை பொருட்கள் கடத்தல் போன்ற குற்றங்களை தடுக்க இரவு பகலாக கண் விழித்து பணியாற்றும் காவல் துறை ஒரு புறம் என இரவு முழுவதும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் சென்னை தூங்கவில்லை ஆயிரம் கண்களுடன் விழித்திருக்கிறது என்பதை இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது உணர்ந்தோம். இதுபோன்ற சவால் நிறைந்த பணியை செய்யும்போது நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது, சில சமயங்களில் மிரட்டல்களும் வரும்'' என்றார்.
- ஸ்ரீ
"நம்மைச் சுற்றி நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. இதெல்லாம் பிரச்னை என்று புரிந்து கொள்ளாமல் வாழும் மக்களே இங்கு அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com