இன்னும் நிறைய டிராவல் செய்ய வேண்டும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் தொடர் "யாரடி நீ மோகினி'. இந்தத் தொடரின் மூலம் பெரியதிரையில் இருந்து சின்னத்திரைக்கு
இன்னும் நிறைய டிராவல் செய்ய வேண்டும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் தொடர் "யாரடி நீ மோகினி'. 
இந்தத் தொடரின் மூலம் பெரியதிரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்திருப்பவர் நட்சத்திரா குட்டிசேரி. அவரிடம் பேசினோம்: 

தமிழ்த் திரைத்துறைக்குள் வந்தது எப்படி?
எனக்கு பூர்வீகம் கேரளா. அப்பா, அம்மா, சொந்தபந்தம்னு எல்லாரும் அங்கதான் இருக்காங்க. பி.காம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது என் தங்கை நிலா கேரளாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அவர்மூலம்தான் தமிழில் "கிடா பூசாரி மகுடி'யில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக சீரியல் எண்ட்ரியும் கிடைத்தது. பொதுவா டிவியில் இருந்து பெரியதிரைக்கு போவதுதான் வழக்கம். ஆனால்  நான் பெரிய திரையில் இருந்து  சின்னத்திரைக்கு வந்திருக்கிறேன்.  

"யாரடி நீ மோகினி' சீரியல் குறித்து?
"கிடா பூசாரி மகுடி' படத்தில் என்னோட நடிச்ச சிவக்குமார் சார் மூலமாகத்தான் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.  அவர்தான் "யாரடி நீ மோகினி' சீரியலுக்கான செலக்ஷன் நடப்பதாக போய் பார்க்கச் சொன்னார். நானும் போய் கலந்து கொண்டேன். மூன்று நாட்கள் வரை எந்த போனும் வரவில்லை.  இனி அவ்வளவுதான் நம்மள கூப்பிட மாட்டாங்கன்னு மனசு கஷ்டமாக இருந்தது. மூன்றாவது நாள் போன் செய்து நீங்க செலக்ட் ஆகியிருக்கீங்கன்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. பெரியதிரை நடிப்பிற்கும், சின்னத்திரை நடிப்பிற்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. அதனால சின்னத்திரை நடிப்பிற்கான அனுபவங்களை இப்பத்தான் பழகிகிட்டு இருக்கேன்.  இந்தத் தொடரில்  வெண்ணிலாங்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். "ஐயா' படத்தில் வரும் நயன்தாரா கேரக்டர் மாதிரி என்னோடது. மாமா மேல உயிரையே வச்சிருக்கிற கேரக்டர்.

உங்கள் பெயர் நட்சத்திரா,  உங்கள் தங்கை பெயர் நிலா வித்தியாசமா இருக்கிறதே?
எங்க அப்பா, அம்மாவுக்கு எங்களுக்கு அழகான பெயராக வைக்க வேண்டும் என்று நிறைய தேடினார்களாம். அதில் அவர்களுக்கு பிடித்தது நட்சத்திராவும், நிலாவும்தான். அழகா இருக்குல்ல...

பிடித்த விஷயங்கள்?  
எனக்கு எப்போதும் புதுப் புது ஊர்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனால நிறைய டிராவல் செய்வது பிடிக்கும்.  

பெரியதிரையிலிருந்து மீண்டும் வாய்ப்புகள் வருகிறதா?
தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு பெரியதிரைகளிலுமே வாய்ப்பு வருகிறது. தமிழைப் பொருத்தவரை தங்கை கதாபாத்திரங்களாகத்தான் பெரும்பாலும்  வருகிறது. மலையாளத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறேன். 

முதல் படத்திலேயே மொட்டை எல்லாம் அடித்து நடித்திருக்கீங்களே?
முதல்படமான "கிடா பூசாரி மகுடி' படத்திற்கான கிளைமாக்சுக்காக மொட்டை அடித்தேன். என்னோட டெடிகேஷனைப் பார்த்த டைரக்டரும், மொத்த யூனிட்டுமே கைத்தட்டி பாராட்டினதை மறக்க முடியாது. அந்தப்படம் நடிக்கும்போது பி.காம் முதல் வருஷம் படிச்சிட்டு இருந்தேன். மொட்டைப் போட்டுட்டு காலேஜுக்குப் போறதுக்கு ஒரு மாதிரி இருந்தது. யாராவது எதாவது சொல்லிடுவாங்களோனு பயந்தேன்.  ஆனால் அப்படி எதுவும் இல்லாம பாராட்டுகளே கிடைத்தது. சந்தோஷமாக இருத்தது. 
- ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com