இந்திய வம்சாவளி சிறுமியின் சாதனை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் அனன்யா. பன்னிரண்டு வயது. இவர் இந்திய வம்சாவளி சிறுமி.
இந்திய வம்சாவளி சிறுமியின் சாதனை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் அனன்யா. பன்னிரண்டு வயது. இவர் இந்திய வம்சாவளி சிறுமி.

வாஷிங்டனில் சமீபத்தில் நடைபெற்ற ‘Cripps National Spelling Bee’ எனப்படும் ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாகச் சொல்லும் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் அனன்யா கலந்து கொண்டார்.

இறுதிச்சுற்றில் அனன்யாவுக்கும், ஓக்லஹாமாவை சேர்ந்த பதினான்கு வயதான ரோஹன் ராஜீவ்வுக்கும் சரியான போட்டி.

விடாக்கண்டன், கொடாக்கண்டன் ரீதியில் போட்டி போய்க் கொண்டிருந்தது. இருவரும் பெரும்பாலான வார்த்தைகளை சரியாக உச்சரித்ததால், "யார் எங்கே தவறாகச் சொல்வார்' என்று போட்டியைக் காண வந்த கூட்டத்தினருக்கு திக் திக்.

போட்டியாளர்களும், போட்டியைக் காண வந்தவர்களும் காத்திருந்த தருணம் வந்தது. "மராம்' (marram) என்ற சொல்லை ரோஹன் தவறாக உச்சரிக்க, அனன்யா சரியாக கூறி போட்டியில் வெற்றி பெற்றார். "ஸ்பெல்லிங் பீ' போட்டியில் அமெரிக்கர் அல்லாத ஒருவர் வெல்வது இது 13-ஆவது முறையாகும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அனன்யாவுக்கு கிடை த்தி ருக்கும் பரிசுத் தொகை நாற்பதாயிரம் டாலர்கள். சுமார் இருபத்தாறு லட்சம். இந்தப் பரிசுத் தொகையில் பாதியை தம்பிக்கு தந்து விட்டு, மீதி பாதியை தனது மேற்படிப்பிற்காகவும் அனன்யா ஒதுக்குவாராம்.
-பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com