சீனாவின் மறைமுக போர்! 

திரையுலக வட்டாரத்தில் பரவலாக அறியப்பட்டவர் ஜெயங்கொண்டான். கே.கே.நகர் காமராஜர் சாலையில் "கவிஞர் கிச்சன்' என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வரும்
சீனாவின் மறைமுக போர்! 

திரையுலக வட்டாரத்தில் பரவலாக அறியப்பட்டவர் ஜெயங்கொண்டான். கே.கே.நகர் காமராஜர் சாலையில் "கவிஞர் கிச்சன்' என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வரும் இவர், சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வரும் இளைஞர்களுக்கு தன் ஹோட்டலில் வேலை, தங்குமிடம் என நம்பிக்கை தருபவர். ஒரு சில படங்களில் பாடல்கள் எழுதியுள்ள இவர், தற்போது கதை, வசனகர்த்தாவாகவும் வெளிப்பட்டுள்ளார். மாருதி ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. "பசங்க', "கோலி சோடா' படங்களில் நடித்த சிறுவர்கள் இந்தப் படத்துக்காக மீண்டும் இணைகிறார்கள். கஞ்சா கருப்பு, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாமரன் இயக்குகிறார். கதை அம்சம் குறித்து... "இன்றைய பரபரப்பான உலகில், மற்றவரிடம் அக்கறை கொள்ளவோ, கரிசனத்தோடு நடந்து கொள்ளவோ முடியாத நிலையில்தான் இருக்கிறோம். அதோடு, இன்றைய உலகில் வேகமாகப் போட்டி போடுவதை முன்னிட்டு உடனடி கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம். இந்த உடனடி கலாசாரத்தை மாற்றிக்கொள்வதில் இருந்தே மாற்றத்தைத் தொடங்கிவிடலாம். நாம் சமைக்கும் உணவு சில மணி நேரங்களிலேயே கெட ஆரம்பித்துவிடும் என்பது இயற்கையின் நியதி. இதை முன் வைத்து நம் உணவு கலாசாரத்தின் மீது சீனா போன்ற நாடுகள் தொடுத்துள்ள ஒரு மறைமுகப் போர் குறித்த கதை'' இது என்றார் ஜெயங்கொண்டான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com