கனவுகளால் நெய்யப்பட்ட ஆடை!

ஒவ்வொரு பெண்ணும் வாழ்வின் மறக்கமுடியாத தருணங்களில் அணியக்கூடிய ஆடையாக  "பட்டு' உள்ளது. நித்தம், நித்தம் கனவில் கண்டு ரசிக்கக்கூடிய
கனவுகளால் நெய்யப்பட்ட ஆடை!

ஒவ்வொரு பெண்ணும் வாழ்வின் மறக்கமுடியாத தருணங்களில் அணியக்கூடிய ஆடையாக  "பட்டு' உள்ளது. நித்தம், நித்தம் கனவில் கண்டு ரசிக்கக்கூடிய அந்த பொன்னிற கனவுகளை நினைவுகூறும் விதமாகவும், பாரம்பரிய மிக்க பட்டின் மேன்மையை ஒட்டுமொத்த உலகுக்கும் பறைசாற்றும் விதமாகவும் புத்தம் புதிய பட்டு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது பாலம் சில்க்ஸ்.  இந்த கண்காட்சிக்கு "கனவுகளால் நெய்யப்பட்ட ஆடை' என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. 

இந்த கண்காட்சியில் காஞ்சிப்பட்டின் பாரம்பரிய ரகங்களான கெட்டி பார்டர் புடவைகள், பூ வேலைப்பாடு பார்டர் கொண்ட புடவைகள், வட்ட வட்ட பொட்டு வைத்த வண்ணமிகு புடவைகள், பழமையை வியந்தோதும் ஜரிகை டிசைன்கள், மணப்பெண்களுக்கே உரித்த வியத்தகு புடவைகள், வெள்ளிச்சரிகை மின்னும் பிளாட்டினம் வகை புடவைகள் என பல வண்ணங்களில் - பல டிசைன்களில் பட்டுப் புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் புதுமை என்னவென்றால், இந்த கண்காட்சியில் மொத்தம் ஐம்பதே ஐம்பது தேர்வு செய்யப்பட்ட ரக புடவைகள்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த புடவைகளின் ஒவ்வொரு இழையிலும், பாலம் சில்க்ஸின் உரிமையாளர் ஜெயஸ்ரீ ரவி அவர்களின் கற்பனையும் - கடும் உழைப்பும் தெரிந்தது.

இது குறித்து ஜெயஸ்ரீ கூறுகையில்: ""திருமணம் போன்ற சுபநிகழ்வுகளின் போது மட்டுமே பட்டுப்புடவைகள் அணிவது என்ற மக்களின் மனநிலையை மாற்ற பல ஆண்டுகள் பிடித்தது. அதற்காகவே, தற்போது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் அணியத்தக்க வகையில் புதுப்புது பட்டுப்புடவை ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும், ஆறுமாத கால கடும் உழைப்பிற்கு பிறகு கைத்தறிப்பட்டின் பாரம்பரியத்தையும், தற்போதைய காலகட்டத்தின் ஓவியக் கலையழகையும் ஒருங்கிணைத்துள்ளோம்'' என்றார். 
- ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com