டிப்ஸ்... டிப்ஸ்...

வேப்பம்பூவை நல்லெண்ணெய்யில் காய்ச்சி அதை தலையில் தேய்த்து குளித்தால் பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.
டிப்ஸ்... டிப்ஸ்...

* வேப்பம்பூவை நல்லெண்ணெய்யில் காய்ச்சி அதை தலையில் தேய்த்து குளித்தால் பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.

* புளித்தத் தயிரை வடிக்கட்டி வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் குளிர்ச்சியைத் தரும்.
- பி.கவிதா

* வசம்பைத் தட்டி தேங்காய் எண்ணெய்யில் ஊறப்போட்டு அந்த எண்ணெய்யை தலைக்கு தடவி வர "பொடுகு'  குணமாகும்.

* சில பெண்களுக்கு இடுப்பில் சேலை கட்டிய அடையாளம் கறுப்பாகத் தெரியும். இது எளிதில் போகாது. இந்த கறுப்பு மறையத் தினமும் கொஞ்சம் ஆலிவ் எண்ணெய்யைச் சுட வைத்து ஆறிய பின் நன்றாகத் தேய்த்துவர அடையாளம் மறைந்துவிடும்.

* பற்களில் இரத்தக் கசிவு ஏற்படும்போது கடுக்காய், சீரகம், உப்பு மூன்றையும் இடித்துத் தூள் செய்து தினமும் பல் துலக்கி வந்தால் ரத்தக் கசிவு நிற்கும்.

* நெற்றியில் குங்குமம் இட்ட இடத்தில் கறுப்பு மறைய துளசி இலையை, தேங்காய்ப்பால் விட்டு அரைத்து பற்றுப் போட்டால் கறுப்பு மறையும்.
- கே.பிரபாவதி

* நமத்துப்போன பிஸ்கட்டுகளை ஒன்றிரண்டாகப் பொடித்து பழங்களுடன் கலந்து ஃப்ரூட் சாலட் செய்தால் நன்றாக இருக்கும்.

* எண்ணெய்ப் பலகாரங்களை டப்பாவில் நீண்ட நாட்கள் அடைத்து வைத்தால் காரல் வாடை வரும். இதைத் தடுக்க, உப்பை சிறிது துணியில் முடிந்து பலகாரங்களுடன் சேர்த்து டப்பாவில் அடைத்துவிட்டால், காரல் வாடையே இருக்காது.

* எண்ணெய்யைப் புகை கக்கும்வரை சூடேற்றி, பிறகு தெளிய வைத்து, வடிக்கட்டிக் கொள்ளவும். இதில் பலகாரம் செய்தால் காரல் வாடை இருக்காது. எண்ணெய்ப் பொங்கவும் செய்யாது. 
- அமுதா அசோக்ராஜா

* பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கரப்பரில் தாம்பூல சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு கறுத்துப் போன வெள்ளிப்பாத்திரங்கள், பூஜை பாத்திரங்களையெல்லாம் அழுத்தித் தேய்த்தால் அவை பளிச்சென்று ஆகிவிடும்.

* தண்ணீரில் ஒரு சிட்டிகை சோடா உப்பும், கொஞ்சம் அலுமினியம் ஃபாயில் ஆகியவற்றோடு வெள்ளிப் பொருட்களைப் போட்டு கொதிக்க விடுங்கள். ஆறியதும் துடைத்தால் வெள்ளிப் பொருட்கள் பளிச்சென்று இருக்கும்.

* பால் பாத்திரம் தீய்ந்துவிட்டால், சிறிதளவு வெங்காயத்தை அந்தப் பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டால் தீய்ந்த கறை போய்விடும்.

* பாத்திரங்களைக் கழுவும் நீரில் அவ்வப்போது கொஞ்சம் விநிகரைக் கலந்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.

* அரிசி களைந்த தண்ணீரில் துருப்பிடித்த இடியாப்ப அச்சு, அரிவாள்மனை, கத்தி போன்ற பொருள்களை நாலே நாலுமணி நேரம் ஊறவைத்து எடுத்து துணியால் துடைக்க துருபோய்விடும். 

* கொதிக்கவைத்தப் பாலில் நான்கு நெல்மணிகளைப் போட்டு வைத்தால் இரண்டு நாளானாலும் பால் கெடாது.

* பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்துவிட்டால் பழுத்துவிடாமல் பசுமையாகவே இருக்கும்.

* அப்பளம் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் அப்பளம் நீண்ட நாட்கள் கெடாமல்  இருக்கும்.

* காபி டிகாஷன் மீந்து விட்டால் அதில் கொஞ்சம் சர்க்கரையைப் போட்டு வைத்தால் மறுநாள் புது டிகாஷன் போலவே இருக்கும்.

* ஒரு மாதத்திற்கு தேவையான எண்ணெய்யை வாங்கிய பிறகு வெளியூர் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமா? கவலைப்படாமல் 5-6 வற்றல் மிளகாயைப் போட்டு மூடிவைத்துவிடுங்கள். எவ்வளவு நாள் ஆனாலும் எண்ணெய் காரலின்றி, கசப்பின்றி ருசி மாறாமல் இருக்கும்.
- ஆர்.கீதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com