உருவாக்குவது உங்கள் வேலை!

குழந்தைகள்  சுயமாக எதையும் தீர்மானிக்கிற நிலையை அடையும் வரை அவர்களை வழிநடத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது. உங்கள் பங்கை நீங்கள் சரிவரச் செய்யுங்கள்.
உருவாக்குவது உங்கள் வேலை!

குழந்தைகள்  சுயமாக எதையும் தீர்மானிக்கிற நிலையை அடையும் வரை அவர்களை வழிநடத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது. உங்கள் பங்கை நீங்கள் சரிவரச் செய்யுங்கள்.

• கூடியவரை பிள்ளைகள் பள்ளிக்கு மட்டம் போடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாய் விருந்து, விழா என்று அழைத்துச் சென்று அவர்களுடைய வருகைப்பதிவில் பிரச்னையை ஏற்படுத்தி விடாதீர்கள்.

• குழந்தைகள் பாடம் படிப்பதை, எழுதுவதைக் கவனியுங்கள் அவர்கள் சரியான உச்சரிப்புடன் படிப்பதும், பிழையின்றி எழுதுவதும் முக்கியம். கையெழுத்து அழகாய் இருக்க "காப்பி ரைட்டிங்' பயிற்சி அளிக்கலாம்.

• செய்தித்தாள் படிப்பதை, தொலைக்காட்சியில் பயனுள்ள நிகழ்ச்சிகள் பார்ப்பதை ஊக்குவியுங்கள்.

• நூல் நிலையம் சென்று வரும் பழக்கத்தை அறிமுகப்படுத்துங்கள்.

• குழந்தைகளுக்கு நீங்கள் கற்பிக்கும் ஒழுங்குமுறைகள் கடினமானதாய் இருக்கக் கூடாது. அவர்களுடைய நடைமுறைக்கு இலகுவாய்த் தெரிவதை அவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

• உங்கள் எதிர்ப்பார்ப்பைத் தெளிவுப்படுத்துங்கள்.

• குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் வழிகாட்டுதல் மூலமும், அனுபவங்கள் மூலமும் கற்றுக் கொள்கின்றன.

•சிறு குழந்தைகள் தன்னைப்பற்றியே சிந்திக்கும். தன்னுடைய விருப்பங்களுக்கே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைக்கும். அதனைமாற்றி, மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்க நீங்கள்தான் கற்றுத் தர வேண்டும்.

• பள்ளிக்குச் செல்லும் உங்கள் பையனின் மூளையில் பெரிய கனவுகளை, இலட்சியங்களை, ஆசைகளை சுமத்திவிடாதீர்கள். பெரிய எதிர்ப்பார்ப்புகள் பிற்பாடு பெரிய அளவில் ஏமாற்றத்தை உங்களுக்குக் கொடுத்துவிடும். அது அவனுடைய வாழ்க்கை. தன்னுடைய வாழ்க்கைக்கான கனவும், இலட்சியமும், ஆசையும் அவனுக்குத்தான் இருக்கிறது. நீங்கள் அவனுடைய உந்து சக்தியாக மட்டுமே இருக்க முடியும். தன்னுடைய எல்லை எங்கே தொடங்குகிறது என்று உங்கள் பிள்ளை நினைக்கிறானோ அங்கே உங்களுடைய எல்லை முடிந்துவிடுகிறது.
ஆதாரம்: நம் குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள்.
 - சரஸ்வதி பஞ்சு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com