டாக்டரைக் கேளுங்கள்

மச்சம், மரு என்ற இரண்டும் அழகின் குறியீடாக பார்க்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பெண்களின் அழகை மெருகேற்றிக் காட்ட மச்சமும் ஒரு காரணமாக இருந்தது. ஹாலிவுட் நடிகை மெர்லின் மன்ரோ தொடங்கி
டாக்டரைக் கேளுங்கள்

மச்சம், மரு என்ற இரண்டும் அழகின் குறியீடாக பார்க்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பெண்களின் அழகை மெருகேற்றிக் காட்ட மச்சமும் ஒரு காரணமாக இருந்தது. ஹாலிவுட் நடிகை மெர்லின் மன்ரோ தொடங்கி, கோலிவுட் நடிகை சிம்ரன் வரை மச்சத்தினால் அடையாளம் காணப்பட்டவர்கள். ஆனால் அந்த மச்சம் அல்லது மருவைக் கண்காணிக்கவும் வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். காரணம், மருவைப் போன்ற அல்லது மருவில் இருந்து உருவாகும் ஒருவகையான தோல் புற்றுநோய் தாக்கக் கூடும். ஆரம்பத்திலேயே சிரத்தை எடுக்காமல் சிறிது அலட்சியமாக இருந்தால் உயிரைப் பறிக்கும் அபாயமும் உள்ளதாம். இது தொடர்பான கேள்விகளுக்கு தோல் சிகிச்சை நிபுணர்களின் பதில்:

மருவில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளதா?
ஆம்! "மலிக்னன்ட் மெலனோமா' என்று அழைக்கப்படும் தோல் புற்றுநோயானது தோலுக்கு நிறமளிக்கும் நிறமி செல்களில்தான் முதலில் உருவாகிறது. இந்த நிறமிகள்தான் மருவுக்கும் நிறத்தை அளிக்கின்றன. இந்த நிறமிகளைத் தாக்கி, மருவில் புற்றுநோய் ஏற்படுகிறது. சில மரு அல்லது மச்சம் ஏன் புற்றுநோயாக மாறுகிறது என்பதையும், எவை புற்றுநோயாக மாறும் என்பதையும் கண்டறிய முடியாது. எனவே, மருவில் அசாதாரணமான மாற்றங்கள் தெரிந்தால் உடனே அதனைக் கவனிக்க வேண்டும்.

மரு புற்றுநோயாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறிகள் என்ன?
மச்சம் அல்லது மருவின் நிறம், அளவு உள்ளிட்டவற்றில் திடீரென்று மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றைக் கவனிக்க வேண்டும். திடீரென்று புதிதாக ஏதேனும் மரு தோன்றி அது வளர்ச்சியடைந்தாலும் கவனிக்க வேண்டும். ஒரு மருவின் அளவு பென்சில் அழிப்பான் அளவைக் காட்டிலும் அதிகரித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மருவில் அரிப்பு, ரத்தக் கசிவு, திரவ சுரப்பு போன்றவை ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரையுடன் தோல் பரிசோதனைச் செய்ய வேண்டும்.

உடலின் எந்தப் பகுதியில் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்?
இந்தப் புற்றுநோயானது உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். அதிகம் சூரிய ஒளி படாத இடங்கள், கர்ப்பப்பை வாய், விரல் இடுக்கில் கூட பாதிக்கக் கூடும். ஆண்களைக் காட்டிலும் பெண்களையே இந்த புற்றுநோய் அதிகம் பாதிக்கிறது. பெண்களில் பொதுவாகப் பாதிப்படையும் பகுதி கால்கள், ஆண்களின் பின்புறப் பகுதியைப் பொதுவாகப் பாதிக்கும். 

மரு உருவாகாமல் தடுக்க முடியுமா?
பெரும்பாலான மச்சம் அல்லது மருக்கள் மரபணுபால் உருவாவவை. எனவே, அவை உருவாகாமல் தடுக்க இயலாது. மருக்கள் உருவாகி அவற்றில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்து, ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகினால் அவற்றுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com