ஹைஹீல்ஸ் சட்டம்

பிலிப்பைன்ஸ் அரசு அண்மையில் ஒரு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பல நிறுவனங்களில் பெண்கள் "ஹை ஹீல்ஸ்' செருப்புகள் மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கட்டயாப்படுத்துகின்றனர்.
ஹைஹீல்ஸ் சட்டம்

பிலிப்பைன்ஸ் அரசு அண்மையில் ஒரு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பல நிறுவனங்களில் பெண்கள் "ஹை ஹீல்ஸ்' செருப்புகள் மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கட்டயாப்படுத்துகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட  ஒரு பெண், நிர்வாகம் கட்டாயப்படுத்துவதால் தனக்கு பிடித்த செருப்புகளைத் தேர்ந்தெடுத்து அணிய முடியவில்லை என்றும்  உடலும் கெடுகிறது என்றும் அவர் சார்ந்த தொழிலாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.  எனவே, பிலிப்பைன்ஸ் அரசு "ஹை ஹீல்ஸ்' மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கட்டயாப்படுத்தக் கூடாது என்று சட்டம் இயற்றியது, அது அமலுக்கும் வந்துவிட்டது.

கொலம்பியாவிலும் இதுபோன்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஓர் உணவகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் "ஹை ஹீல்ஸ்' அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் என் கால்கள் புண்ணாகிவிட்டன. உடல்நலமும் கெட்டுவிட்டது என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது வைரலாகப் பரவியது. உடனே அந்நாட்டின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எந்த நிர்வாகமும் தன் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

ஊழியர்கள் தங்கள் விருப்பம் மற்றும் செüகரியத்துக்கு ஏற்றாற்போல் காலணிகளை அணிய அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துவிட்டார்.
-ராஜி ராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com