இதயங்களை வென்றவர்!

ஹாலிவுட்டின் பொற்காலம்' என்று அழைக்கப்பட்ட அறுபதுகளின் தொடக்கத்தில் நடித்தவர்களில் தலைசிறந்த நடிகைகள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பெற்றவர் ஆட்ரி ஹெப்பர்ன்.
இதயங்களை வென்றவர்!

ஹாலிவுட்டின் பொற்காலம்' என்று அழைக்கப்பட்ட அறுபதுகளின் தொடக்கத்தில் நடித்தவர்களில் தலைசிறந்த நடிகைகள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பெற்றவர் ஆட்ரி ஹெப்பர்ன்.
அவர் ஒரு நடிகை என்பதற்காக அல்ல, மனிதநேயத்தோடு புற்றுநோயாளிளுக்கு சிகிச்சைகள் வழங்க, ஆதரவற்ற பிள்ளைகளுக்கு வாழ்வு கொடுக்க அவர் பாட்டுபட்டதால் புகழ் பெற்றார்.
"ரோமன் ஹாலிடே' (1950), "சபரினா' (1954), "தி நன்ஸ் ஸ்டோரி' (1959), "பிரேக்பாஸ்ட் அட் 
டிஃபானிஸ்' (1961), "மை ஃபேர் லேடி' (1964), "வெயிட் அன்டில் டார்க்' (1967) போன்ற படங்களில் நடித்து உலகப் புகழ் குவித்தவர்.
"மை ஃபேர் லேடி' படம் தான் இவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைக் கொடுத்தது. அந்தப் பெயரிலேயே இவர் அழைக்கப்படுகிறார். ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்தார். வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றார். 
ஜெனிவாவில் ஐ.நா.வின் குழந்தைகள் நலப் பணிகளில் தம்மை ஈடுபத்திக் கொண்டவர். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று தொண்டாற்றினார். தாம் ஈட்டிய பொருளின் பெரும் பகுதியை ஏழை நாடுகளின் குழந்தைகளுக்காகவே செலவிட்டார்.
ஆனால் நீண்ட நாள்கள் வாழ முடியவில்லை. 
ஆம்! புற்றுநோய் பாதித்தவர்களுக்காக பணியாற்றிய அவரையும் புற்றுநோய் தாக்கியது. அதனால் ஹாலிவுட்டிலிருந்து விலகி அமைதியான வாழ்க்கையைத் தேடி சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்தார். உலகின் பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் கடைசிக் காலத்தைச் சுவிட்சர்லாந்து நாட்டிலேயே கழித்துள்ளனர். 1993-ஆம் ஆண்டில் 
63-ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
அவர் வாழ்ந்த சிற்றூரில் உள்ள சதுக்கத்துக்கு "ஆட்ரி ஹெப்பர்ன் சதுக்கம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் அவரின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com