ஐந்தே நிமிடங்களில் மேக் - அப்

வெளியில் போக அல்லது நிகழ்ச்சிக்கு செல்ல தயாராகச் சொன்னால் பெண்கள் மேக் - அப் போடுவதற்கே பல மணி நேரம் ஆகும் என்று கேலியாகவும், ஆதங்கத்தோடும் பல ஆண்கள் சொல்வதுண்டு!
ஐந்தே நிமிடங்களில் மேக் - அப்

வெளியில் போக அல்லது நிகழ்ச்சிக்கு செல்ல தயாராகச் சொன்னால் பெண்கள் மேக் - அப் போடுவதற்கே பல மணி நேரம் ஆகும் என்று கேலியாகவும், ஆதங்கத்தோடும் பல ஆண்கள் சொல்வதுண்டு! ஐந்தே நிமிடங்களில் தயாராவதற்கான பயனுள்ள தகவல்கள் இதோ:


ஒப்பனைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவசர நேரத்தில் ஐப்ரோ பென்சிலைத் தேடியும், லிப்ஸ்டிக்கைத் தேடியும் ஓடிக்கொண்டிருந்தால் நேரம் விரயம்.


அவசரமாக புறப்பட வேண்டிய தருணத்தில் புதிய சிகை அலங்காரம் எதிலும் ஈடுபடக் கூடாது. புதிய முயற்சிகளை ஓய்வு நேரங்களில் எடுக்கலாம்.


முகத்துக்கு ஒப்பனை செய்த பின்பு கூந்தலை வாருவது சிறந்தது. அப்போதுதான் முக ஒப்பனைக்கு ஏற்ற முறையில் கூந்தலை அலங்காரம் செய்யலாம்.


சருமப் பாதுகாப்புக்கான திரவத்தில் நாலைந்து சொட்டுகளை முகத்தில் தேய்த்த பின்பு வேறு க்ரீம்களைத் தேய்த்தால், முகம் கறுத்துப் போகாமல் இருக்கும்.


கண் மை போட அதிக நேரமாகும்; அதனால் ஐ - பென்சிலைப் பயன்படுத்தலாம்.


உடையின் நிறம், ஐ - ஷேடோ ஆகியவற்றுக்குப் பொருத்தமாக லிப்ஸ்டிக் போட வேண்டும்.


புடவை, சுரிதார் என எந்த உடையை அணிய வேண்டும் என்று முந்தைய நாள் இரவே தேர்ந்தெடுத்து வைத்து விட வேண்டும்.

("அழகு குறிப்புகள்' என்ற நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com