மித்தாலி ராஜ் வாழ்க்கை திரைப்படமாகிறது..!

டென்னிஸ் ஆட்ட வீராங்கனை சானியா மிர்ஸா போன்று கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜை நோக்கி நெட்டிசன்கள் விமர்சனங்களை எய்யத் தொடங்கிவிட்டார்கள்.
மித்தாலி ராஜ் வாழ்க்கை திரைப்படமாகிறது..!

டென்னிஸ் ஆட்ட வீராங்கனை சானியா மிர்ஸா போன்று கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜை நோக்கி நெட்டிசன்கள் விமர்சனங்களை எய்யத் தொடங்கிவிட்டார்கள்.

எப்போதும் நீல நிற சீருடையில் இருந்த மித்தாலி, உலகக் கோப்பைக்கான போட்டிக்குப் பின் ஃ பாஷன் உடைகளுக்கு மாறினார். சில பத்திரிகைகளும் மித்தாலிக்கு மாடர்ன் உடைகள் போட்டு படங்கள் எடுத்து பேட்டிகள் வெளியிட்டன. கூடவே நெட்டிசன்கள் விமர்சனங்களும் மித்தாலியைத் தொடர்ந்தன.
தன்னை கேலி செய்த நெட்டிசனுக்கு அதிரடியான பதில் கொடுத்து சமூக ஊடகத்தில் அதிக பாராட்டுகளை மித்தாலி பெற்றார்.

சமீபத்தில் மித்தாலி, பெங்களூருவில் கிரிக்கெட் அகாடமி தொடர்பான திறப்பு விழாவிற்குச் சென்றபோது, அங்கு தனது சக கிரிக்கெட் தோழிகளான வேதா கிருஷ்ணமூர்த்தி, மமதா மேபென் மற்றும் நூஷின் அல் கதீர் ஆகியோருடன் சேர்ந்து எடுத்தப் புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் மித்தாலி பகிர்ந்தார்.

"உங்கள் கைப்பகுதி உடையில் வியர்வை படிந்துள்ளது. அது பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது...' என்று ஒரு நெட்டிசன் மித்தாலியின் தோற்றம் குறித்து தனது கருத்தினை டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

"நான் கிரிக்கெட் மைதானத்தில் வியர்வை சிந்தி விளையாடியதால்தான் இப்போது இந்த நிலைமையில் இருக்கிறேன். எனவே என் கைப்பக்கம் வியர்த்து உடையில் படிந்திருப்பது பற்றி வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று பதிலடி தந்தார்.

இன்னொரு படம் மிதாலியை கொஞ்சம் கவர்ச்சியாகக் காட்ட.. இதுபோன்ற படங்களைத் தவிர்க்கலாமே... என்றும் கருத்துகள் பதிவாகியுள்ளன. "உடை அணிவது மித்தாலியின் சுதந்திரம்... " என்று ஆதரித்தும் பதிவுகள் வந்துள்ளன.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கை திரைப்படமாகும் சீசன் தொடங்கியுள்ளது. குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, மல்யுத்த வீராங்கனைகள் போகாத் சகோதரிகள், வாழ்க்கை திரைப்படங்களாக வந்துவிட்டன. பி.வி. சிந்து, சாய்னா நேவால், கபில் தேவ், அபினவ் பிந்த்ரா, பல்பீர் சிங் போன்ற விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கையும் படமாகின்றன.

அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் மித்தாலி ராஜ். "வையாகாம் 18' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மித்தாலியின் வாழ்க்கையைத் திரைப்படமாக தயாரிக்கிறது. அதற்கான உரிமையை மித்தாலியிடமிருந்து இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

ஃபாஷன் பத்திரிகையான "வோக் இந்தியா' (யர்ஞ்ன்ங் ஐய்க்ண்ஹ) வின் அக்டோபர் மாத இதழ் அட்டையில் மித்தாலியின் படத்தை ஷாருக்கான், நீதா அம்பானி படங்களுடன் சேர்த்து வெளியிட்டு மித்தாலியை கெளரவித்திருக்கிறது. மித்தாலியின் படத்தைப் பார்த்து இதுவரை எந்த நெட்டிசனும் தனது கருத்தினைப் பதிவு செய்யவில்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
- சுதந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com