அடுத்த ஐன்ஸ்டீன் இவர்தான்!

அறிவியல் மேதை ஐன்ஸ்டீனுக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப எந்த விஞ்ஞானியாலும் முடியவில்லை
அடுத்த ஐன்ஸ்டீன் இவர்தான்!

அறிவியல் மேதை ஐன்ஸ்டீனுக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப எந்த விஞ்ஞானியாலும் முடியவில்லை. இந்நிலையில், "அடுத்த ஐன்ஸ்டீன் இவர்தான்' என்று சொல்லப்படும் விஞ்ஞானி ஒரு பெண்மணி என்பதுதான் அதில் உள்ள சிறப்பு.

சப்ரினா கோன்ஸாலெஸ். இருபத்துநான்கு வயதிலேயே பல கண்டுபிடிப்பு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். சப்ரினா, கியூபா நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், அமெரிக்க குடிமகள்.

உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளான ஸ்டீபன் ஹாகிங், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இருவர்க்கும் உள்ள சிறப்பு என்னவென்றால் இவர்களுடன் யாரையும் ஒப்பிட்டுப் பேசவில்லை. இவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு வேறு யாரும் அறிவியல் பங்களிப்புகளை செய்யவில்லை என்பதுதான் காரணம். தனது அறிவாலும், திறமையான கண்டுபிடிப்புகளால், "அடுத்த ஐன்ஸ்டீன் இவர்தான்' என்று புகழப்படும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் சப்ரினா. இருபத்திநான்கு வயதில் செய்ய வேண்டிய சாதனைகளை தனது பதினான்கு வயதில் செய்து முடித்து அனைவருக்கும் ஓர் ஆச்சரியக் குறியாக மாறியிருக்கும் சப்ரினாவின் அடுத்த சாதனை என்னவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

பதினான்கு வயதில் ஒரு குட்டி விமானம் ஒன்றை தயாரித்து பதினாறு வயதில் அதில் பறந்தவர். மாசாச்சூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்னும் கல்வி நிறுவனத்தில் மிக அதிக மதிப்பெண்களுடன் தேறியவர் சப்ரினா.

சப்ரினா, தற்சமயம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார். விண்வெளி காலம் மற்றும் கருப்பு துளைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் சப்ரினா சொந்தமாக ஒரு ஸ்மார்ட் போன் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை . பத்திரிகை, சானல்கள் பேட்டிகளிலிருந்து விலகி நிற்பவர். சப்ரினாவின் ரோல் மாடல் அவரது பள்ளி ஆசிரியைதானாம். அந்த ஆசிரியையை ஒரு முறை சந்தித்த போது, " நான் குட்டி விமானம் செய்து ஓட்டியும் இருக்கிறேன்'' என்று சப்ரினா பெருமையுடன் சொல்ல.. "அது இருக்கட்டும்.. இன்று என்ன நீ புதிதாக சாதிக்கப் போகிறாய்?'' என்று கேட்டாராம். அந்த கேள்வியே சப்ரினாவின் தாரக மந்திரம் ஆகிவிட்டது. அறிவியல் வட்டாரங்களில் கருத்தரங்குகளில் சொற்பொழிவுகள் செய்து வரும் , சப்ரினாவின் திறமைகளை அறிந்த ஹார்வர்ட் விஞ்ஞான வட்டாரங்கள், "அடுத்த ஐன்ஸ்ட்டினை நாங்கள் கண்டு பிடித்து விட்டோம். அது சப்ரினா'' என்று பெருமிதப்பட... சப்ரினா பிரபலமாகிப் போனார். சப்ரினாவின் செல்லப் பெயர் "பிசிக்ஸ் கேர்ள்' (Physics girl)) என்பதுதான்..!
- மலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com