காந்திஜியின் கொள்ளுப் பேத்தி..!

இந்தியா எழுபதாவது  சுதந்திர  தினம் கொண்டாடி  முடித்திருக்கும் வேளையில்,  அமெரிக்காவில்  காந்திஜியின் கொள்ளுப்   பேத்தி   வசித்து வருவது குறித்து அறிய முடிகிறது.
காந்திஜியின் கொள்ளுப் பேத்தி..!

இந்தியா எழுபதாவது  சுதந்திர  தினம் கொண்டாடி  முடித்திருக்கும் வேளையில்,  அமெரிக்காவில்  காந்திஜியின் கொள்ளுப்   பேத்தி   வசித்து வருவது குறித்து அறிய முடிகிறது.  காந்திஜியின்   வாரிசுகள்  பலரும்  பல நாடுகளில்  தங்கி வசித்து வருகிறார்கள்.   அவர்களில் ஒருவர்தான் மேதா.  அமெரிக்காவில் பிறந்து  வாழ்ந்து வருபவர். 

காந்திஜியின் மகன்களில்   மூத்தவரான ஹரிலால் என்பவரின் மகனான காந்திலாலின் மகள்தான் மேதா. காந்திலால்  1948- இல்  அமெரிக்கா சென்று அங்கேயே தங்கி விட்டார். மேதா அமெரிக்க டிவி சானல்களில்  ‘DJ' வாக இருப்பதுடன்,   டிவி  நிகழ்ச்சிகளையும் தயாரித்து வருகிறார்.

சமூக தளங்களிலும் மேதா பிரபலம். நகைச்சுவையாக எழுதுவதில் மேதாவுக்கு இணை மேதாதானாம். டிவி நிகழ்ச்சிகள். வித விதமான உடைகளில் வலம் வரும் மேதாவுக்கு  கொள்ளுத்தாத்தாவிடம்  பிடித்தது  அஹிம்சை  கொள்கைதானாம்..!
- சுதந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com