கிரிக்கெட் வீராங்கனையும் டாக்டர் பட்டமும்!

இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான்  பதானை பற்றி ஆய்வு செய்து,  பெண் கிரிக்கெட் வீராங்கனை தன்வீர்  டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்த  விஷயம் உங்களுக்கு தெரியுமா? 
கிரிக்கெட் வீராங்கனையும் டாக்டர் பட்டமும்!

இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான்  பதானை பற்றி ஆய்வு செய்து,  பெண் கிரிக்கெட் வீராங்கனை தன்வீர்  டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்த  விஷயம் உங்களுக்கு தெரியுமா? 

இர்ஃபான் பதானும், தன்வீரும்  பால்ய வயதில்  இணைந்து  விளையாடியது உண்டு.  இர்ஃபான் பதான் மற்றும் அவருடைய  சகோதரர் யூசுப் பதானுக்கும் பயிற்சியாளராக இருந்தவர்  மெகன்டிஷேக்.  இவர்  தன்வீரின் தந்தை.

தன்வீர், பரோடா எம்.எஸ். பல்கலைக்கழகத்தில்  மூன்று ஆண்டுகள், பெண்கள் அணிக்கு கேப்டனாக இருந்தவர். குஜராத் அணிக்கு முதலில் ஆடி,   பிறகு அதற்கு பயிற்சியாளராகவும் இருந்தவர்.  பரோடா எம்.எஸ். பல்கலைக்கழகத்திலும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

தற்போது சி.பி.டிகிரி  கல்லூரியில்,  உடற்கல்வித் துறையில் உதவி பேராசிரியராக இருக்கிறார்.  இவருக்கு  டாக்டர் பட்டம் (Phd) பெற வேண்டும் என்ற ஆசையிருந்தது.   இதுபற்றி ஆய்வு நடத்த 200 பேருக்கு கடிதம் எழுதினார். இதற்கு பலர் பதில் அனுப்பினர்.

கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண், 2003-இல் ஆஸ்திரேலியா சென்றபோது, அங்கு இர்ஃபான் பதான் வீசிய ஒரு பந்து, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்டை எப்படி போல்டாக்கியது என்பதை விவரித்து, அதனை தன்னால் மறக்க  இயலாத பந்து என குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்  கிரண்மோரே,  தன்னுடைய பதிலில்,  இர்ஃபான் பதான், மனதால் மிகவும் வலுவானவர் என குறிப்பிட்டிருந்தார். இவற்றையெல்லாம் தொகுத்து டாக்டர் பட்டம் வென்றுவிட்டார் தன்வீர்.  

இர்ஃபான் பதான் பற்றி தன்வீர் என்ன சொல்கிறார்:
"இர்ஃபான், தொடர்ந்து முயற்சிகளை மேற் கொண்டு வருபவர்;  இதனால் விரைவில் இந்திய அணியில் மீண்டும் அவருக்கு இடம் கிடைக்கலாம்''  என்றார் தன்வீர்.  இதனை இர்ஃபான் பதானும் ஆமோதிக்கிறார்.

தன்வீரை பொருத்தவரை,  ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனை , ஒரு ஆண் கிரிக்கெட்வீரரை பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெறுவது அனேகமாக இவரே முதலாவதாக இருக்க வேண்டும். 
 -ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com