எளிய மருத்துவம்!

பனங் கருப்பட்டியை காய்ச்சி வைத்துக் கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் டீ, காப்பி, பால், பழச்சாறு இவற்றில் கலந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது சர்க்கரையின் அளவு உயராது.
எளிய மருத்துவம்!

* கோடை வெப்பத்தால் உடல் சோர்வு அதிகம் இருக்கும் அதனால். நீர் மோரில் வெள்ளரித்துண்டு, தர்பூசணி துண்டு போட்டு குடித்தால் உடல் சோர்வு துளி கூடத் தெரியாது வெப்பத்தின் தாக்கம் நம்மை பாதிக்காது. 

* பனங் கருப்பட்டியை காய்ச்சி வைத்துக் கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் டீ, காப்பி, பால், பழச்சாறு இவற்றில் கலந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது சர்க்கரையின் அளவு உயராது.

* பெரிய நெல்லிக்காய் சீசன் இது. நெல்லிக்காயை வாங்கி உப்பு போட்டு அடித்து காய வைத்து வத்தலாக்கி வைத்து கொண்டால் அவ்வப்போது எல்லா நேரத்திலும் சாப்பிடலாம்.

* பாகற்காய் இலையை கொதிக்க வைத்து சாறு எடுத்து காலையில் சாப்பிட்டால் கல்லீரல் உபாதைகள் நீங்கும்.

* மஞ்சள்காமலை நோயை குணமாக்கும் வல்லமை பாகற்காய்க்கு உண்டு பாகற்காயைச் சாறாக சாப்பிட்டால் உடனே குணமாகும்.
- பொ. பாலாஜி

* தேங்காய்ப் பாலால் வாயை நன்றாகக் கொப்பளித்துக் குடித்தால் வாய்ப்புண் ஆறிவிடும். வறட்டு இருமலுக்கு வாயில் பனங்கற்கண்டை அடக்கிக் கொள்ளவும்.

* மோரில் சிறிது பெருங்காயம் கலந்து குடித்தால் வயிற்றுவலி, வாயுத் தொல்லை நீங்கிவிடும்.

* தினமும் உணவில் பூண்டு சேர்த்து வந்தால் உடம்பிலுள்ள கொழுப்பு குறையும்.

* தேங்காய் எண்ணெய்யும், எலுமிச்சை சாற்றையும் கலந்து தேய்த்தால் மூட்டு வீக்கம், வலி குணமாகும் அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஜலதோஷத் தொல்லை குறையும்.

* ஓரிரு மிளகுகளை வாயில் போட்டு மென்றால் தொண்டைப்புண் குணமாகும்.

* கிராம்பைக் கொதிக்க வைத்த தண்ணீரைக் குடித்தால் வயிற்றுப் புரட்டல், வாந்தி அடங்கும். 
- நெ.இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com