டிப்ஸ்... டிப்ஸ்: துணிகள் பராமரிப்பு!

வெள்ளைத் துணி பளிச்சிட வெள்ளைத்  துணிகளைத் துவைக்கும்போது தண்ணீரில் சிறிது டேபி
டிப்ஸ்... டிப்ஸ்: துணிகள் பராமரிப்பு!


* வெள்ளைத் துணி பளிச்சிட வெள்ளைத்  துணிகளைத் துவைக்கும்போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.
* சிறிது வெது வெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை  ஊறவைத்து பிறகு சோப்புப் போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.
* மிதியடிக்கு அடியில் அதே அளவில் பழைய செய்தித்தாளை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாôம் தாளில்  சேர்ந்திருக்கும்.
* துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில்,  கொசு மேட்டை ஐந்தாறு பரப்பி அதன்மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை  பூச்சிகள் நெருங்காது.
* துணிகளில் ஹேர் - டை  பட்டால் அந்த  கறையை நீக்க, நகப் பாலிஷ் ரீமூவரால்  டை  படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.
* அரைவாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினிகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.
* துவைத்த துணிகளுக்கு நீலம் போடும்போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக  இல்லாமல் சமமாக இருக்கும். 
* நைலான் துணியை தைக்கும்போது  ஊசி துணியில்  இலகுவாக இறங்க அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com