கேரளத்தில் சேவை செய்யும் நடிகைகள்!

சென்னை நகரம் மழை வெள்ளம், ஏரி நீர் இவற்றில் சிக்கிய போது "அன்போடு கொச்சி' அமைப்பு புதிய துணிமணிகளை சென்னை மக்களுக்கு அனுப்பி வைத்து உதவியது
கேரளத்தில் சேவை செய்யும் நடிகைகள்!

சென்னை நகரம் மழை வெள்ளம், ஏரி நீர் இவற்றில் சிக்கிய போது "அன்போடு கொச்சி' அமைப்பு புதிய துணிமணிகளை சென்னை மக்களுக்கு அனுப்பி வைத்து உதவியது.
 கேரளத்தில் பிரளயம் போல வெள்ளத்தின் ஆக்கிரமிப்பு ஓங்க, கேரளத்தின் பெரும்பகுதிகள் தீவுகள் ஆகிவிட்டன. அவதிப்படும் கேரளா மக்களுக்கு தேவையான பொருள்களை அனுப்பி வைக்க மீண்டும் "அன்போடு கொச்சி' அமைப்பு, கொச்சி நகர்வாழ் மக்களிடமிருந்தும் கடைகளிலிருந்தும் உதவி கோர ஆரம்பித்து... கிடைத்த பொருள்களைத் தேவையான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
 "அன்போடு கொச்சி' அமைப்பிற்கான பணிகளை செய்ய சமூக ஆர்வலர்கள் முன்வந்தது போல தமிழ், மலையாள நடிகை பார்வதியும் சேவை செய்ய முன் வந்திருக்கிறார். மேக்கப் ஏதும் போட்டுக் கொள்ளாமல், நடிகை என்ற பந்தா இல்லாமல், சுழன்று சுழன்று வேலை பார்க்கிறார். சக சேவையாளர்களுடன் சேர்ந்து நன்கொடையாக வந்திருக்கும் பொருள்களை பிரித்து பேக் செய்வதில் உதவிவருகிறார். தவிர பல முறை முகநூல் பக்கத்தில் "லைவ்'வில் வந்து கேரளத்தில் வெள்ள நிலை குறித்து பேசுவதுடன் என்னென்ன பொருள்கள் உடனடியாகத் தேவை என்பதற்கும் வேண்டுகோள் விடுக்கிறார் ..!
 வேறு மலையாள நடிகைகள் கேரளத்தில் வெள்ள நிவாரண வேலைகளில் ஈடுபடாத நிலையில், பார்வதி கொச்சியில் காலை முதல் மாலை வரை எல்லா சேவையாளர்களுடன் சேர்ந்து பணி செய்து வருவது, மீண்டும் நடிகை பார்வதியை வித்தியாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.
 நடிகை பார்வதியின் சேவையை அறிந்ததும் உடனே உதவிகள் செய்ய புறப்பட்டவர் இன்னொரு முன்னணி மலையாள நடிகை அமலாபால். அமலா - பார்வதியுடன் இணையாமல் ஆலுவா பகுதியில் செயல்படும் முகாமிற்குப் போய்விட்டார். மலையாளப் படத்தில் நடிக்கும் போது விபத்தால் இடது கை அடிபட்டு காயம் ஏற்பட்டு சிகிச்சையிலிருந்தாலும், ஒரு கையால் பொருள்களைக் கையாண்டு உதவிகள் செய்து வருகிறார்.
 இன்னொரு மலையாள நடிகை பூர்ணா (மலையாள படங்களில் ஷம்னா காசிம்) கொச்சி தம்மனம் பகுதியில் வெள்ளப் பாதிப்பு மக்கள் வசிக்கும் தற்காலிக முகாமில் பணிகளை செய்து வந்தார்..!
 கீர்த்தி சுரேஷ் திருவனந்தபுரம் பகுதியில் செயல்படும் முகாமில் இணைந்து பொது மக்களிடம் உதவிகள் கேட்டு வேண்டுகோள் விடுத்தக் கொண்டிருந்தார்.
 - சுதந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com