பச்சை மிளகாயின் பயன்கள்!

பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸைடுகள், நார்ச்சத்து, விட்டமின் சி, கே, ஈ, இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
பச்சை மிளகாயின் பயன்கள்!

பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸைடுகள், நார்ச்சத்து, விட்டமின் சி, கே, ஈ, இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சை மிளகாய் உணவில் சேர்த்துக் கொள்வது  உடலுக்கு நல்லது. ஆனால்  அளவுக்கு அதிகமாக  உணவில் சேர்த்து கொள்வது தவறாகும்.

சளி, இருமல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை அடிக்கடி சமையலில் பயன்படுத்தலாம்.  உணவில் பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிடுவதால் அவை சளியின் வீரியத்தை குறைக்க உதவும்.

பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி ஆக்ஸைடுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது. மேலும் இது முதுமை தோற்றம் உண்டாவதையும் குறைக்கும். 

பச்சை மிளகாய் பயன்படுத்துவதால் மூக்கடைப்பு பிரச்னை சரியாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப்  பராமரிக்கவும் உதவும்.

நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சை மிளகாயில் கலோரிகள் இல்லாததால் உடல் எடையினை குறைக்க உதவும் டயட்டில் இதனை சேர்த்து கொள்ளலாம்.

நுரையீரல் புற்றுநோய்  உண்டாவதை குறைப்பதால் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உணவில் பச்சை மிளகாயை அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது. இயற்கையாகவே பச்சை மிளகாயில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடலில் காயம் ஏற்பட்டவர்கள்  உணவில் பச்சை மிளகாயினை சேர்த்துக் கொள்ளும்போது வலி தண்டுவடத்தின் மூலம் நேரடியாக மூளையினை தாக்குவதை தடுக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com