சட்டப்பேரவைக்கு செல்லும் குழந்தை!

குழந்தையுடன் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில், விவாதங்களில் பங்கேற்பதும், அப்படி விவாதங்களில் பங்கெடுத்தபடியே தாய்ப்பால் ஊட்டுவதும் மேலை நாடுகளில் நடக்கிறது.
சட்டப்பேரவைக்கு செல்லும் குழந்தை!

குழந்தையுடன் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில், விவாதங்களில் பங்கேற்பதும், அப்படி விவாதங்களில் பங்கெடுத்தபடியே தாய்ப்பால் ஊட்டுவதும் மேலை நாடுகளில் நடக்கிறது. அப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. 
நடந்த இடம் தில்லி சட்டப்பேரவை. சட்டப்பேரவை உறுப்பினர் சரிதா சிங். தில்லி சட்டப்பேரவைக் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள ஓர் அழையா விருந்தாளி வந்திருந்தார். அவர் சரிதா சிங்கின் மகன். இரண்டுமாதக் குழந்தை. பெயர் அத்வைத் அபினவ் ராய். 
குழந்தையுடன் வந்த சரிதாவை யாரும் பார்க்கவில்லை. ஆனால் பேரவைக் கூட்டத்தொடரில் அவரது தோளில், மடியில் கிடந்த அத்வைதத்தை எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். 
சரிதா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர். அத்வைத் பிறந்தது கடந்த நவம்பர் 8-ஆம் தேதி தான். தொகுதிக்குச் செல்லும்போதும், பொதுக் கூட்டங்களில் பேசும்போதும், மக்களின் குறைகளைக் கேட்கும்போதும் சரிதாவின் மடியில் அத்வைத் இருப்பது வழக்கம். அந்தப் பழக்கம் சட்டப்பேரவை வரை நீண்டிருக்கிறது. 
அத்வைத் தூங்கும்போது, சட்டப்பேரவைக்கு அருகில் இருக்கும் அறையில் படுக்க வைத்துவிட்டு, சரிதா சபை நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார். அத்வத்தைப் பார்த்துக் கொள்ள சக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் இருந்து கொள்கிறார். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால் சரிதா மகனை சட்டப்பேரவைக்கு கொண்டு செல்கிறார். 
""சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மகப்பேறு கால விடுமுறை கிடையாது. பொதுநலத்தில் ஈடுபடுபவர்கள் இவற்றைப் பொருட்படுத்தக் கூடாது. மக்கள் நலம்தான் முக்கியம். அத்வைதத்தை உடன் கொண்டு செல்வதில் எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. அத்வத்துக்கும் இல்லை. இப்படி கொண்டு செல்வதில் ஒரு நன்மை இருக்கிறது. என் மகனைப் பார்ப்பவர்கள் ஆசிர்வதிக்க மறப்பதில்லை. ஆசிர்வாதம் ஒரு வரப்பிரசாதம் அல்லவா?'' என்கிறார் சரிதா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com