விழுந்தாலும் எழுமின்!

சின்னக் குழந்தைகள்தான் அடிக்கடி கீழே விழுவார்கள் என்பதில்லை, நம் வீட்டில் உள்ள வயதானவர்களும் அடிக்கடி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள்.
விழுந்தாலும் எழுமின்!

சின்னக் குழந்தைகள்தான் அடிக்கடி கீழே விழுவார்கள் என்பதில்லை, நம் வீட்டில் உள்ள வயதானவர்களும் அடிக்கடி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள். சிலருக்கு வயது முதிர்ச்சியினாலும், சிலருக்கு அவர்கள் சாப்பிடும் மாத்திரைகளாலும் லேசான மயக்கம் ஏற்பட்டு சட்டென விழுந்துவிடுகிறார்கள். அவர்களுக்கான எளிய டிப்ஸ்:
* சிறந்த உடற்பயிற்சி தேவை. தினமும் எளிய உடற்பயிற்சி செய்வதால் நீங்கள் சட்டென விழுந்துவிட மாட்டீர்கள். 

* பாதுகாப்பான நடைபயிற்சி தினமும் நல்லது. உடற்பயிற்சி செய்வதால் உடலும் உறுதிபெறும், நன்றாக வளைந்து கொடுக்க பக்குவப்படும், தசைகள் வலுப்பெறும்.

* கீழே விழுந்துவிடுவோம் என்று பயந்து சிலர் உடற்பயிற்சி செய்யமாட்டார்கள், அப்படி இருப்பவர்கள் தான் அதிகம் கீழே விழுந்துவிடுகிறார்கள். அப்படித் தோன்றினால் மருத்துவர் அல்லது பிஸியோதெரப்பிஸ்ட் அறிவுரைப்படி உடற்பயிற்சி செய்யலாம். 

* சிறந்த பாதுகாப்பான காலணிகளைத் தேர்வு செய்து அணியவும். அதிக உயரம் மற்றும் வழுவழுப்பான செருப்பு அல்லது ஷூ பயன்படுத்த வேண்டாம். மிகவும் தளர்ந்த காலணிகள் அல்லது மிகவும் குறுகிய காலணிகளை அணியக் கூடாது. சரியான அளவிவான காலணிகைளை அணிவதால் மூட்டுவலி குறையும்.

* வீட்டை சுற்றிப்பாருங்கள். எங்கெல்லாம் தடுமாறி விழும் வாய்ப்பு உள்ளது என்பதைக் கணித்து, அங்கு ஜாக்கிரதையாக நடக்கவும்.

* வழக்கமாக வீட்டில் நடக்கும் இடங்களில் தரையில் தாள், துணி, ஒயர் போன்ற எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

* தண்ணீர், சோப்பு நீர், எண்ணெய், காபி ஏதாவது தரையில் கொட்டியிருந்தால் உடனே துடைத்து அகற்றவும்.

* சரியில்லாத அல்லது உடைந்த நாற்காலி, கட்டில் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

* அன்றாடம் உபயோகிக்கும் துணிமணிகள், பாத்திரங்கள் உணவு வகைகளை எளிதில் எடுக்கும்படியான இடத்தில், உயரத்தில் வைக்கவும்.

* குளியலறை, கழிவறை வாசலில் வழுக்காத தரைவிரிப்பைப் பயன்படுத்தவும்.

* குளியறையில் உட்கார்ந்து குளிப்பது நல்லது.

* வீட்டின் அனைத்து அறைகளிலும் போதிய வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

* இருட்டில் நடப்பதைத் தவிர்க்கவும்.

* இரவு தூக்கத்தின்போது நடுவில் எழுந்தால் விளக்கைப் போட சுவிட்ச் அருகில் இருக்கும்படி அமைத்துக் கொள்ளவும் அல்லது சின்ன டார்ச்சைப் பயன்படுத்தவும்.

* கழிவறையில் சட்டென எழ அருகில் ஒரு கைப்பிடி வைக்க ஏற்பாடு செய்யவும்.

* வழுக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

* தேவைப்பட்டால் கெளரவம் பார்க்காமல் கைத்தடியைப் பயன்படுத்தவும்.

* மாடிப்படியில் ஏறும்போதும் இறங்கும்போதும் கைப்பிடிகளைப் பிடித்தபடி 
நடக்கவும்.
- எஸ்.சீதாலட்சுமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com