கன்னடத்தில் "பிரேமலோகா' படத்தில் நடித்த ஜூஹி சாவ்லா, நீண்ட இடைவெளிக்குப் பின்பு "புஷ்பக விமானா' என்ற கன்னடப் படத்தில் நடிப்பதுடன் ஒரு பாடலையும் பாடியுள்ளார். தொடர்ந்து "வெரிகுட் பத்துக்குப் பத்து' என்ற மற்றொரு குழந்தைகள் படத்தில், பள்ளிகளில் காலையில் பாடும் பிரார்த்தனைப் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.