செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்களா?

அடுக்குமாடி குயிடிருப்பானாலும் சரி, தனி வீடுகளானாலும் சரி செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்களா?

அடுக்குமாடி குயிடிருப்பானாலும் சரி, தனி வீடுகளானாலும் சரி செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவற்றை வளர்ப்பதில் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். புதிதாக செல்லப் பிராணிகளை வளர்க்க விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்:
* வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள், விலங்குகளை பல நோய்களில் இருந்து காப்பாற்ற தவறாமல் அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

* செல்லப் பிராணிகளை வளர்ப்போரும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது அவசியம்.

* நாய், பூனை போன்வற்றுடன் விளையாடிய அல்லது பழகிய பிறகு கை, கால்களை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

* செல்லப் பிராணிகளை முகத்தின் அருகே கொண்டு செல்லவோ, முத்தமிடவோ கூடாது.

* வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதேனும் நோயின் அறிகுறி தென்பட்டால், காலம் தாழ்த்தாமல் உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

* செல்லப் பிராணிகளை வளர்க்கும் வீட்டில் உள்ள அனைவரும் நகங்களை அவ்வப்போது வெட்டி சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

* குழந்தைகள் வளர்ப்புப் பிராணிகளிடையே அதிகமாக விளையாடக் கூடும். அதனால் குழந்தைகளுக்கும் பிராணிகளுக்கும் இடையே உள்ளப் பழக்கத்தில், குழந்தைகளின் சுத்தத்தை பெற்றோர் பேண வேண்டும்.

* செல்லப் பிராணிகளையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
- கே.பிரபாவதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com