மிருதுவான சப்பாத்திக்கு...

மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி சுவையாக இருக்கும்.
மிருதுவான சப்பாத்திக்கு...

• கோதுமையை நன்கு காய வைத்து, 1 கிலோவுக்கு 1/4 கிலோ என்ற அளவில் சோயா, 100 கிராம் வெள்ளை கொண்டைக்கடலை ஆகியவற்றை சேர்த்து அரைத்தால், சத்தான சுவையான சப்பாத்திகள் கிடைக்கும்.

• 1 கிண்ணம் மாவுக்கு 1/2 கிண்ணம் தண்ணீர் என்ற அளவில் சேர்த்து, மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

• மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி சுவையாக இருக்கும்.

• பிரட் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்து, மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

• நல்ல சூடான கல்லில் திரட்டிய சப்பாத்தியைப் போட்டு எடுக்க வேண்டும். அதிக நேரம் கல்லில் போட்டால் சப்பாத்தி கடினமாகிவிடும்.

• பூரிக்கட்டையை இருமுனைகளிலும் பிடித்து மாவைத் திரட்ட வேண்டும். அதிகம் அழுத்தாமல் திரட்டினால் சப்பாத்தி நன்கு உப்பி வரும்.

• சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது சர்க்கரையைச் சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்.

• "பிளேக் சீட்' எனப்படும் ஆழி விதையை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். இதை 1 கிண்ணம் மாவுக்கு 1/4 தேக்கரண்டி என்ற அளவில் சேர்த்துப் பிசைந்து செய்தால், சப்பாத்தி வெகு நேரம் மிருதுவாக இருக்கும்.

• சப்பாத்திக்கு மாவு பிசைந்து, குறைந்தது 1 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com