டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டு வைத்தியம்

நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் அரிப்பும் புண்ணும் இருந்தால் துளசி இலையுடன் தேங்காய்ப்பால் சில சொட்டுகள் விட்டு அரைத்து நெற்றியில் ஒரு வாரம் பூசி வந்தால் புண் ஆறிவிடும். அரிப்பும் நீங்கும்.
டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டு வைத்தியம்

* இரவில் படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் கசகசா, ஒரு தேக்கரண்டி அதனுடன் இரண்டு பாதாம் பருப்பைச் சேர்த்து மையாக அரைத்து, பாலில் சேர்த்துக் காய்த்து, கல்கண்டு போட்டு சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.

* நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் அரிப்பும் புண்ணும் இருந்தால் துளசி இலையுடன் தேங்காய்ப்பால் சில சொட்டுகள் விட்டு அரைத்து நெற்றியில் ஒரு வாரம் பூசி வந்தால் புண் ஆறிவிடும். அரிப்பும் நீங்கும்.

* சற்று அதிகமாகச் சாப்பிட்டு சிரமப்படும்போது வெந்நீரில் கொஞ்சம் ஓமம், சீரகம் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் குடித்தால் வயிறு சமன்படும்.

* கடுமையான இருமல் இருந்தால் மூன்று டம்ளர் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர பலன் நிச்சயம்.

* குளிர்காலத்தில் உடம்பு மிகவும் வறட்சியாகிவிடும். அதனால் குளித்த பின் ஓரிரு சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது பாடி லோஷனை பரபரவென்று தேய்க்கவும்.

* சந்தனமும் மஞ்சளும் நன்றாக அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு மறையும்.

* கஸ்தூரி மஞ்சளை ரோஜா நீரில் அரைத்து வெயிலில் வைத்து, முகத்தில் பூசி வந்தால் முகப்பரு மறையும்.

* முடி கொட்டுவதைத் தவிர்க்க கேஸ்டிராயிலை சூடுபடுத்தி, வெதுவெது சூட்டில் ரோமம் கொட்டும் வேர்களில் தேய்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து, சீயக்காய் தேய்த்து தண்ணீரில் அலசினால் முடி கொட்டுவது நிற்கும்.

* திடீர் தலைவலியைப் போக்க எளிய வழி ஒரு இளநீர் வாங்கிக் குடிப்பதுதான். நமது உடலில் நீர்ச்சத்து குறைந்திருந்தால் அல்லது பசியினாலும் தலைவலி வரலாம். அதனை இளநீர் குணப்படுத்திவிடும்.

* ஏசி அறைகளில் உறங்குபவர்களில் சருமம் நாளடைவில் மிகவும் வறண்டுவிடும். எனவே, இரவில் தூங்கப் போகும் முன் இரவு உடை மாற்றிக் கொள்ளும் முன் சிறிது பாடிலோஷனை உடம்பு முழுவதும் தடவுவது வறட்சியைத் தடுக்கும். 

* சிலருக்கு முட்டி இணைப்புகளில் அவ்வப்போது வலி தோன்றும். இந்த வலியைக் குறைக்க வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் மஞ்சள் தூளைக் கலந்து கலக்கி குடித்தால் வலி குறையும்.

* தினமும் குளிப்பதற்கு முன் உடலில் தேங்காய் எண்ணெயை லேசாக தடவிக் கொண்டு குளித்தால் தோலில் வறட்சி ஏற்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com