கூகுளில் வேலை கேட்ட சிறுமி!

கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி க்ளோயி பிரிட்ஜ்வாட்டர்.
கூகுளில் வேலை கேட்ட சிறுமி!

கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி க்ளோயி பிரிட்ஜ்வாட்டர். அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான சுந்தர் பிச்சைக்கு எழுதியுள்ள கடிதத்தில் "என் பெயர் க்ளோயி. நான் பெரியவளானதும் கூகிள்ல வேலை செய்ய விரும்புகிறேன். எனக்கு சாக்லேட் பாக்டரியில் வேலை செய்யவும் பிடிக்கும். ஒலிம்பிக்கில் நீச்சல் செய்யவும் பிடிக்கும். கூகிள்ல வேலை கிடைச்சா பீன் பேக்ல உக்காந்து சறுக்கி விளையாடலாம்னு சொல்றாரு அப்பா. எனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும். என்கிட்ட டேப்லெட் இருக்கு அதுல நான் கேம் விளையாடுறேன். அப்பா தந்த கேம்ல ரோபோவ கட்டத்திற்கு மேலயும் கீழயும் நகர்த்தினால் கம்ப்யூட்டரைப்பத்தி அதிகமாக தெரிஞ்சுக்கலன்னு சொல்றாரு எங்க அப்பா' என்று விரிகிறது அந்த சின்னஞ்சிறு மழலையின் கடிதம். தனது கடிதத்தில் இறுதியாக, கூகுள்ல வேலைக்கு சேரணும்னா உங்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பணும்னு என் அப்பா சொல்றாரு. ஆனா எப்படி அப்ளிகேஷன் அனுப்புறதுனு தெரியல. லெட்டர் எழுதினா போதும்னு அப்பா சொன்னாரு. நா இத தவிர இன்னும் ஒரு லெட்டர் மட்டும் தான் எழுதியிருக்கேன். அது கிறிஸ்துமஸ்காக என் அப்பாவுக்கு,' என்று தனது கடிதத்தை நிறைவு செய்கிறாள் அந்தச் சிறுமி.
 இந்த கடிதத்திற்கு தனது வேளைப்பளுவுக்கும் இடையில் சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி ஆச்சரியப்படுத்தியுள்ளார் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை. "டியர் க்ளோயி, உன் கடிதத்துக்கு மிகவும் நன்றி. உனக்கு கம்ப்யூட்டரும் ரோபோவும் பிடிக்குமென்பதில் மகிழ்ச்சி. தொழில்நுப்டபம் குறித்து உனது படிப்பை தொடருவாய் என நம்புகிறேன். பள்ளிப்படிப்பிற்கு பிறகு நீ கடினமாக உழைத்தால் உன் ஒலிம்பிக் நீச்சல் கனவிலிருந்து கூகுளின் வேலை கிடைப்பது வரை எல்லாம் நிஜமாகும். உன் பள்ளிப்படிப்பிற்கு பிறகு உனது கடிதத்தை பரிசீளிக்கிறேன்'' என சிறுமியின் தன்னம்பிக்கைக்கு நம்பிக்கை அளிக்கிற வகையில் பதில் கடிதம் எழுத்தியுள்ளார். 7 வயது சிறுமியின் தன்னம்பிக்கையும், சுந்தர் பிச்சையின் பதிலும் தானே தற்போது எல்லோருக்கும் தேவைப்படுகிறது.!
 - தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com