தடகளத்தில் தங்கம் வென்ற வீராங்கனை!

பின்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச தடகள சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 விநாடிகளில் கடந்து
தடகளத்தில் தங்கம் வென்ற வீராங்கனை!

பின்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச தடகள சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 விநாடிகளில் கடந்து உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் ஹீமா தாஸ். இதன் மூலம் ஜூனியர் தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
 அஸ்ஸôம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் உள்ள டிங் என்ற கிராமத்தில், விவசாயியின் மகளாக 2000 ஜனவரி 9}ம் தேதி பிறந்தவர் ஹீமா.
 உலக தடகள போட்டிக்காக அப்பாவின் விவசாய நிலத்தில் ஒட்டப் பயிற்சியை தொடங்கியவர் இவர். 18 மாத கடுமையான பயிற்சியின் பலன் தற்போது இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதன்மூலம், 2016}ம் ஆண்டு, போலந்து நாட்டில் நடந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை நீரஜ் சோப்ராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
 கடந்த ஆண்டில்தான், தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார் ஹீமா. தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டபோதே, 400 மீட்டர் ஒட்டத்தை 51.13 நொடிகளில் கடந்து சாதனைப் படைத்தவர்.
 ஹீமா கூறுகையில்,
 "எனக்குக் கால்பந்து விளையாடுவதில்தான் ஆர்வம். ஏனென்றால், என் அப்பா கால்பந்து விளையாடுவார். ஆனால், கால்பந்து அணி இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றியெல்லாம் அப்போது எனக்கு தெரியாது.
 அது நம் நாட்டில் அவ்வளவு பிரபலமாக இருக்கிறதா என்பதும் தெரியாது. அப்போதுதான் என் பள்ளி விளையாட்டு பயிற்சியாளர், தடகளத்தின் மீது கவனம் செலுத்துமாறு கூறினார். பிறகு, ஒட்டபந்தயத்தில் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். கவுஹாதி சென்று பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதற்கு முழு ஆதரவு அளித்தது அஸ்ஸாம் கூட்டமைப்பு (அள்ள்ஹம் அள்ள்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய்). அவர்கள் உதவி இல்லை என்றால் இன்று இந்த சாதனை சாத்தியமில்லை.
 எல்லா தடகள வீராங்கனைகள் போன்று எனக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் கனவு இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகுவதுதான் தற்போதைய என் எதிர்காலத் திட்டம்'' என்றார்.
 - விசாலாட்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com