இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-11

இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-11

இந்த வாரம் "நேச்சுரல் டை' (இயற்கை சாயம்) பற்றி பார்ப்போம். நேச்சுரல் டை என்பது துணிகளில் வண்ணம் மற்றும் விதவிதமான டிசைன்களால் செய்யப்படுவது.

இந்த வாரம் "நேச்சுரல் டை' (இயற்கை சாயம்) பற்றி பார்ப்போம். நேச்சுரல் டை என்பது துணிகளில் வண்ணம் மற்றும் விதவிதமான டிசைன்களால் செய்யப்படுவது. மேலும் நேச்சுரல் டை என்பது பெரிய கடல் என்றே சொல்லலாம். அதிலும் நம்மை மிகவும் வியக்க வைப்பது மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்கள். அவை உலகப் புகழ் பெற்றதும் கூட, உலக பாரம்பரிய சின்னங்களாக உள்ள இந்த ஓவியங்கள் இயற்கை வண்ணங்களால் செய்யப்பட்டவை. 2000 ஆண்டுகளைக் கடந்தும் இதன் நிறம் இன்னும் மங்கவில்லை என்பதே இதன் சிறப்பு. மேலும், வளர்ந்த நாடுகளில் துணிகளில் அச்சிடும் கெமிக்கல் டைக்குத் தடை செய்து, நேச்சுரல் டைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நாமும் நேச்சுரல் டைக்கு முக்கியத்துவம் அளிக்கலாமே நாட்டுக்கும் நல்லது, நமக்கும் நல்லதுதானே.
 ஸ்கிரீன் பிரிண்டிங்: இதற்கு தேவையான ஸ்கிரீன்கள் பல டிசைன்களில் ரெடிமேடாகவே கிடைக்கின்றன. அல்லது நமக்கு ஏதேனும் டிசைன் தேவையெனில் ஆர்டர் கொடுத்தும் செய்து கொள்ளலாம். அதில் நேச்சுரல் டை உபயோகப்படுத்தி பிரிண்டிங் செய்யலாம். இதையும் புடவை, சுடிதார், பெட்சீட், தலையனை உறை என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். இதற்கு சன்மைக்கா போட்ட டேபிள் தேவைப்படும். நீங்கள் எந்தவிதமான பிரிண்டிங் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல் சன்மைக்கா போட்ட டேபிள் தேவை. அதாவது புடவை என்றால் புடவை நீளத்திற்கு வீட்டில் டேபிள் இருந்தால் நல்லது. அல்லது சுடிதார், கைக்குட்டை, தலையனை உறை என்றால் சிறிய அளவு மேசை தேவைப்படும். இடவசதியும் மேசை வைக்கும் அளவு இருந்தால் போதும். இதற்கு ரூ.1000 முதலீடு இருந்தால் போதுமானது.
 டை அண்ட் டை : நேச்சுரல் டை ரெடிமேடாகவே கடைகளில் கிடைக்கும். அல்லது நாமே இதை தயார் செய்யலாம். இதைக் கொண்டு பிளைன் புடவை, துப்பட்டா, சுடிதார் என வண்ணம் தோய்க்கலாம். அல்லது வட்ட வடிவ டிசைனாகவும், அலை அலையாகவும் என பல வகைகளில் டிசைன்கள் செய்து விற்பனை செய்யலாம். நல்ல வரவேற்பு இருக்கும். இதற்கு ரூ.500 முதலீடு செய்தால் போதும்.
 பிளாக் பிரிண்டிங்: இதற்கு தேவையான பிளாக்குகள் ரெடிமேடாகவே பல டிசைன்களில் கடைகளில் கிடைக்கின்றன. அல்லது உருளைக் கிழங்கு, பீட்ரூட், வெங்காயம் போன்றவற்றை வைத்தும் பிளாக்காக உபயோகப்படுத்தலாம். இதற்கு பிளீச்சிங் போடாத காட்டன் துணிகளை வாங்கி பிளாக் பிரிண்ட் செய்து, சுடிதார், நைட்டி, புடவை போன்றவற்றை உருவாக்கலாம். மேலும், பெட்ஷீட், தலையனை உறை, ஸ்கிரீன் என பலவற்றிலும் உபயோகப்படுத்தலாம். கெமிக்கல் டை என்றால் பளீச் என்று இருக்கும். நேச்சுரல் டை என்றால் சற்று டல்லாகத்தான் தோற்றமளிக்கும்.
 கலம்காரி: கலம்காரி டிசைன் என்பது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. தற்பொழுது கலம்காரி டிசைன்கள் இளம் பெண்களிடையே அதிகவரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு பாலில் கடுக்காய்ப் பொடிப் போட்டு துணிகளை ஊற வைத்து பின் காயவிட்டு மடித்து வெயிலில் வைத்து அதன்பிறகு அதில் கையால் வரைவது தான் கலம்காரி டிசைன். இதுவே தற்போது அச்சு வழியாகவும் செய்யப்படுகிறது. இதில் வார்லி ஆர்ட்ஸ், பேப்ரிக் பெயிண்டிங், மதுபானி என நிறைய வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு எது பிடித்து உள்ளதோ அதை தேர்வு செய்து வீட்டில் இருந்தபடியே செய்யலாம். நல்ல வரவேற்பும், கனிசமான வருமானமும் கிடைக்கும்.
 - ஸ்ரீ
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com