தெரிந்து கொள்வோம்: நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்திற்கு சிறந்த முந்திரிப் பழம்...!

முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா - கரோட்டீன், டானின் என்ற ஆண்டி-ஆக்ஸிடண்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
தெரிந்து கொள்வோம்: நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்திற்கு சிறந்த முந்திரிப் பழம்...!

• முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா - கரோட்டீன், டானின் என்ற ஆண்டி-ஆக்ஸிடண்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

• ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு அதிகமான சத்துக்கள் ஒரு முந்திரிப் பழத்தில் உள்ளது. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.

• முந்திரிப் பழத்தைச் சாப்பிட்டால், வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

• முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும். இதில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

• முந்திரிப் பழமானது, நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி, ஈறுகளில் ரத்தக் கசிவுகள், பற்களின் பிரச்னைகள் மற்றும் நகங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- பி. பரத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com