டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகராக சென்னை பெண்மணி!

இந்திராநூயி, உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான "பெப்சிகோ' வின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ஆவர். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகராகவும்
டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகராக சென்னை பெண்மணி!

இந்திராநூயி, உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான "பெப்சிகோ' வின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ஆவர். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகராகவும் இருக்கிறார்.
 தனிப்பட்ட வாழ்க்கையில் நூயி ஒரு சிறந்த தாய், மனûவி மற்றும் மகள், சில சமயங்களில் தன் மகள்களுக்காக வீட்டுக்கு வரமுடியாத நேரங்களை நினைவுகூறும் போது "இதயம் வலிக்கிறது' என்று கூறுகிறார்.
 குழந்தைப் பருவத்தில், நூயியின்தாய் தன் மகள்களிடம் ""ஜனாதிபதி, பிரதம மந்திரி அல்லது முதலைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?'' என்பதை விளக்கி ஓர் உரையை வழங்க சொல்வாராம். அவர்களில் சிறப்பாக உரையை விளக்கும் ஒருவருக்கு அவர் பரிசளிப்பார். இந்த நடைமுறை நூயிக்கும் மற்றும் அவருடைய சகோதரிக்கும் அவர்கள் விரும்பிய விஷயத்தில் ஒரு நம்பிக்கையை வளர்த்தது.
 நூயி பட்டப் படிப்பை முடித்ததும், அமெரிக்காவில் உள்ள வணிக பள்ளியில் படிக்க விண்ணப்பித்தார். அவருக்கு அதில் இடம் கிடைக்காது என்ற எண்ணத்தில்தான் அவரது பெற்றோர் சம்மதித்தனர். ஆனால் யேல் மேலாண்மை பள்ளியில் இருந்து ஸ்காலர்ஷிப்புடன் வெளிவந்தார்.
 நூயி ஒரு நேர்காணலுக்காக "சூட்' வாங்க நள்ளிரவு வரவேற்பாளராக பணிபுரிந்துள்ளார். ஆனால் அந்த நேர்காணலில் தோல்வியுற்றார். அதன் பிறகு, மற்றொரு நேர்காணலுக்குப் புடவையில் சென்று அந்த வேலையைக் கைப்பற்றினார். இதிலிருந்து "நாம் நாமாக இருக்க வேண்டும்' என்ற பாடத்தைக் கற்று கொண்டார்.
 பின்னர், 6 ஆண்டுகள் பாஸ்டன் குழுமத்தில் பணி புரிந்தார். அதன்பின், மோட்டோரோலாவின் துணைத்தலைவராகவும், கார்ப்பரேட் வியூகம் மற்றும் திட்டமிடல் இயக்குநராகவும் பணி புரிந்தார். பிறகு, அமெரிக்காவில் உள்ள ஜுரிச் தொழிற்சாலை நிறுவனத்தில் 4 ஆண்டுகள் உயர் அதிகாரியாக இருந்தார்.
 1994-ஆம் ஆண்டு நூயி, பெப்சிகோவில் இணைந்தார். பல உயர்நிலை ஒப்பந்தங்களின் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். குறிப்பாக, பில்லியன் டாலர் ஒருங்கிணைப்புகளான ட்ராபிகானா, க்வாகர் ஓட்ஸ் போன்றவையும் அடங்கும்.
 2001-ஆம் ஆண்டு, சிஎப்ஓ ஆனார். பின்னர், 2006-இல் பெப்சிகோவின் விரிவாக்கம் மற்றும் அதன் அடையாளத்தை பல்வகைப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் நூயி முக்கிய பங்கு வகித்தார். ஸ்டீவ் ஜாப்ஸிடம் கற்ற பாடம் தொடக்கத்தில் பெப்சிகோ மென்பானங்களில் மட்டுமே அதன் பார்வையை செலுத்தி வந்தது. நூயி தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது ஸ்டீவ் ஜாப்ûஸ சந்தித்தார். ஒரு விஷயத்தை முன்னுரிமை படுத்த விரும்பினால் அந்த விஷயத்தில் இவரின் நேரடி தலையிடுதல் இருக்க வேண்டும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவுறுத்தினார்.
 சிறு வயது முதல் தொடர்பு திறனில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறார். ஒரு சிறு குழுவை எப்படி உத்வேகப்படுத்த வேண்டும். மற்றும் ஒரு விஷயத்தை எப்படி சரியாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும் போன்ற விஷயங்களை இளம் வயதிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நூயி.
 ஒரு தலைமை நிர்வாகிக்கு, வெற்றிகரமான நிறுவனத்தை முற்றிலும் கவனிப்பது மிகவும் கடினமாக இருக்கும், ஏனென்றால் மக்கள் எப்போதும் அவசரத்தையோ அல்லது தேவைகளையோ உணர்வதில்லை. நூயி தடைகளை உடைத்து தொடர்ந்து வெற்றிகளை பெற முடிந்ததற்கு காரணம், அவருடைய ஆர்வம், ஆற்றல், முயற்சி மற்றும் வாழ்நாள் முழுதும் அவரை மாணவராக எண்ணும் தன்மை போன்றவைதான்.
 - விசாலாட்சி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com