பிரிட்ஜை கவனமாக கையாளுங்கள்!

பிரிட்ஜை அடிக்கடி திறக்கக்கூடாது. திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். பிரிட்ஜை நீண்ட நேரம் திறந்து வைத்திருந்தால் அதில் உள்ள வாயு வெளியேறிவிடும். பின்னர், குளிர்த்தன்மை குறைந்துவிடும்.
பிரிட்ஜை கவனமாக கையாளுங்கள்!

• பிரிட்ஜை அடிக்கடி திறக்கக்கூடாது. திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். பிரிட்ஜை நீண்ட நேரம் திறந்து வைத்திருந்தால் அதில் உள்ள வாயு வெளியேறிவிடும். பின்னர், குளிர்த்தன்மை குறைந்துவிடும்.

• பிரிட்ஜை சமையறையில் வைப்பதை தவிர்க்கவும். புகைப்பட்டு நிறம் போய்விடும்.

• பிரிட்ஜிலிருந்து காய்கறிகள், பால் போன்றவற்றை ஜில்லென்று எடுத்தால் அதை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வந்தபிறகு சமைப்பது எரிபொருளை பெருமளவில் மிச்சப்படுத்தும்.

• பிரிட்ஜை வீட்டில் வைக்கும்போது சுவரில் இருந்து குறைந்தது 30 செ.மீ. தூரம் தள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் அதில் இருந்து வெப்பக்காற்று எளிதில் வெளியேறும்.

• பிரிட்ஜுக்குள் அதிகமாக சமையல் பொருட்களை வைக்கும்போது அந்த பொருட்களிடைய போதிய காற்றோட்டம் இருக்காமாறு பார்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவை சமளவில் குளிர்ச்சி உடையதாக இருக்கும். 

• பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும்போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். அதற்கு பதிலாக சோடா உப்பு கலந்த வெந்நீரை பயன்படுத்தலாம்.

• வெப்பத்தை அதிகமாக வெளியிடும் ஏ.சி, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பிரிட்ஜின் அருகில் வைக்கக் கூடாது. 

• ஃபிரீஸருக்குள் ஐஸ் கட்டி அதிகளவில் படியாதவாறு அவ்வப்போது நீக்கிவிட்டால் மின்சாரம் அதிக அளவு செலவாகாது. அதுபோன்று ஃபிரீஸரில் படிந்த ஐஸ் கட்டிகளை கத்தி, கரண்டி போன்றவற்றைக் கொண்டு சுரண்டி எடுக்கக் கூடாது. இது பிரிட்ஜை சேதப்படுத்திவிடும்.

• சமைத்த உணவு பொருட்களை பிரிட்ஜினுள் சுட்டோடு வைக்கக் கூடாது. ஆறிய பின்புதான் வைக்க வேண்டும். இல்லையேல் மின்சாரம் அதிகளவில் விண்ணாவதோடு, பிரிட்ஜும் விரைவில் கெட்டுவிடும்.

• பிரிட்ஜில் எப்போதும் சிறிது புதினா இலையையோ, சாறு பிழிந்த எலுமிச்சை மூடிகளையோ போட்டு வைத்தால், பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வராது. 
- சி.ஆர். ஹரிஹரன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com