"ஷர்மிலி', "கபிகபி' போன்ற படங்கள் மூலம் பிரபலமான ராக்கி குல்சார், திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். பல வாய்ப்புகள் வந்த போதும் நடிப்பை தவிர்த்து வந்தவர், நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் கவுதம் ஹலதார் வற்புறுத்தலின் பேரில் பெங்காலி மொழியில் எடுக்கப்படும் மோடி நந்தியின் நாவலான "பிஜோலி முக்தி' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தை இந்தியில் "நிர்வான்' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடவும் முடி வெடுத்துள்ளனர்.