டிப்ஸ் கார்னர்: கிச்சன் டிப்ஸ்!

தக்காளி பச்சடி, கீரை மசியல் செய்யும் போது கடுகுக்குப் பதில் சீரகத்தைத் தாளித்தால் சுவையாக இருக்கும். வாசனையும் தூக்கும்.
டிப்ஸ் கார்னர்: கிச்சன் டிப்ஸ்!

* தோசை மாவில் ஒரு கையளவு கடலை மாவு போட்டு நன்றாக கலந்து தோசை வார்த்து திருப்பிப் போட்டு அதன் மேல் வெண்ணெய்யோ நெய்யோ தடவி வைத்து கொடுங்கள். ஓட்டல் தோசை போன்று மொறு மொறுவென்று இருக்கும்.

* பயத்தம் பருப்பு மசியல் செய்ய குக்கரில் பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தண்ணீர் குறைவாக வைத்தால் பருப்பு ஒட்டாமல் வரும். வெந்த பிறகு நீர் விட்டு கரைத்து விட்டால் தனித் தனியாகி மசியலும் நன்றாக வரும்.

* தக்காளி பச்சடி, கீரை மசியல் செய்யும் போது கடுகுக்குப் பதில் சீரகத்தைத் தாளித்தால் சுவையாக இருக்கும். வாசனையும் தூக்கும்.

* பால் பாயாசம் செய்யும்போது கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விட்டுச் செய்தால் பாயாசம் மிகவும் சுவையாக இருக்கும்.

* அடைமாவு அரைக்கும் போது வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் போட்டு நைசாக அரைத்து அடை செய்தால் அடை மிகவும் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.எல்லா சத்துக்களும் வீணாகாமல் கிடைக்கும்.

* முள்ளங்கி இலையைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் வறுத்துச் சேர்த்து துவையல் அரைத்தால் டேஸ்ட் அசத்தலாக இருக்கும்.

* வாழைப்பூவை ஆய்ந்து வேக வைத்து அத்துடன் சிறிது தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி தயிரில் கலந்து பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க அருமையாக இருக்கும்.

* எந்தக் காயைப் போட்டு சாம்பார் செய்தாலும் அத்துடன் கூட இரண்டு பெரிய நெல்லிக்காய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கி செய்தால் சாம்பாரின் சத்தும் சுவையும் கூடும்.

* வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொரிந்து மொறு மொறுப்பாக இருக்கும்.

* ஓமப்பொடி செய்யும்போது கடலை மாவு மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு, சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், நொறுங்கிப் போகாமலும் நன்றாக எடுக்க முடியும்.

* தோசைமாவு, பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்து போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.
(பயனுள்ள வீட்டு குறிப்புகள் - நூலிலிருந்து)
- சி.பன்னீர்செல்வம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com