உடல் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க!

உடல் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க!

அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடலில் சுரக்கும் வியர்வையினால் உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனைப் போக்க...

• அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடலில் சுரக்கும் வியர்வையினால் உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனைப் போக்க...

• அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.

• நிறமும், மணமும் சேர்க்கப்பட்ட "பாத் சால்ட்' கிடைக்கிறது. அதனை வாங்கிவந்து ஒரு பக்கெட் தண்ணீரில் 1 தேக்கரண்டி பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

• டீ ட்ரீ அல்லது லேவண்டர் - இந்த இரண்டில் ஏதேனும் ஓர் அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம்.

• அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

• உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பின்னர் துவைத்துக் கொள்ளலாம் என்று மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும்.

• உணவுப் பழக்கம் கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம். பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் காரணமாகலாம். எனவே, பச்சைக் காய்கறிகள், கீரைகள் அதிகம் சாப்பிட வேண்டும். 

• வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

• பட்டைத்தூள் 2 தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும்.

• குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என்று நிறைய கிடைக்கின்றன. நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். அழகும் மேம்படும்.

• வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். 

• வியர்வை அதிகம் சுரப்பவர்கள். பெரும்பாலும் காட்டன் உடைகள், உள்ளாடைகளையே பயன்படுத்த வேண்டும். 
- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com