தங்கம் வாங்கியதும் திருமண ஒப்பந்தம்..!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வாங்கியதும் திருமணத்தை நிச்சயம் செய்திருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட்.
தங்கம் வாங்கியதும் திருமண ஒப்பந்தம்..!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வாங்கியதும் திருமணத்தை நிச்சயம் செய்திருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட்.
 ஆகஸ்ட் 27 இரவு. டில்லி விமான நிலையம் எப்போதும் போல சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று மகிழ்ச்சி களேபரம். வினேஷின் விரலில் மல்யுத்த வீரரான சோம்வீர் ரத்தி மோதிரம் அணிவித்து கொண்டிருந்தார். பிறகு வினேஷ் சோம்வீரின் விரலில் மோதிரம் அணிவித்தார். அப்போதுதான் வினேஷின் ஆண் தோழராக சோம்வீர் ஏழு ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்ற குட்டு வெளிப்பட்டது. சமயோஜிதமாக கேக் வெட்டி வினேஷ் சோம்வீர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கவும் செய்தார்கள்.
 ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுடன் இணைத்து வினேஷ் பேசப்பட்டு வந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்து வந்தனர். அந்த மறுப்பு இந்த திருமண நிச்சயம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 திருமண நிச்சயம் நடந்தாலும் கல்யாணம் உடனடியாக இல்லையாம். வினேஷ் கலந்து கொள்ள வேண்டிய போட்டிகள் வரிசையாக உள்ளனவாம். தவிர 2020 ஒலிம்பிக்சில் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கத்தை வினேஷ் குறி வைத்திருப்பதால் திருமணம் இப்போதைக்கில்லையாம்..!
 - அங்கவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com