நட்பு: பொன்மொழிகள்

நிலையான புத்தி இல்லாதவனையும், போலியானவனையும், நன்றி மறப்பவனையும் நண்பனாக்கிக் கொள்ளாதே.
நட்பு: பொன்மொழிகள்

• நட்பு இன்பத்தைப் பெருக்கி, துன்பத்தைக் குறைக்கிறது.
-அடிகள்

• நிலையான புத்தி இல்லாதவனையும், போலியானவனையும், நன்றி மறப்பவனையும் நண்பனாக்கிக் கொள்ளாதே.
-ஜெசி

• நல்ல நண்பனை பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பதுதான்.
-எமர்சன்

• வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்துகொள்வர், வறுமைக் காலத்தில் நண்பர்களை நாம் தெரிந்து கொள்வோம்.
-இங்கர்சால்

• நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு; நல்ல மனிதர்களின் சாயலை நீ அடைவாய்.
-வில்லியம் ஜேம்ஸ்

• விசுவாசமான நண்பன் தெய்வத்தின் சாயலானவன்.
-கார்லைல்

• புது நண்பர்களைப் பெற முடியாதவன், வாழும் கலையை மறந்தவனாவான்.
-மிக்செல்

• எதிரியின் புன்னகையைவிட, நண்பனின் சினம் மேலானது.
-எட்கர் ஆலன்போ
-ஜி.ஆரோக்கியதாஸ், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com