அங்கிள் ஆன்டெனா

ரொட்டிக்கான மாவில் ஏராளமாக "ஸ்டார்ச்' இருக்கிறது. இந்த "ஸ்டார்ச்' ஈரப்பதம் அதிகம் கொண்டதாக இருக்கும்.
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
"பிரட்'டை வெளியில் திறந்து வைத்தால் ஓரிரு நாட்களில் கடினமாகி விடுகிறது. ஆனால் பிஸ்கட் நமத்துப் போகிறது. இது ஏன்?
பதில்: 
ரொட்டிக்கான மாவில் ஏராளமாக "ஸ்டார்ச்' இருக்கிறது. இந்த "ஸ்டார்ச்' ஈரப்பதம் அதிகம் கொண்டதாக இருக்கும். ரொட்டியைத் தயாரித்துக் கவரில் போட்டு அடைத்து விற்பனைக்கு விடுகிறார்கள். நாம் அதைப் பிரித்து வெளியில் வைக்கும்போது - நாள்கள் செல்லச் செல்ல - இந்த ஈரப்பதம் குறைந்துகொண்டே போவதால் - ரொட்டி தனது மென்மையை இழந்து கெட்டியாகி உலர்ந்து விடுகிறது. இதனால்தான் நாள்பட்ட ரொட்டி வறண்டுபோய் - "ரஸ்க்' ஆகி விடுகிறது.
பிஸ்கட்டும் இதேபோல தயாரிக்கப்பட்டாலும் அதனுடைய நிலைமை வேறு. அதில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் "உறையிலிருந்து வெளிப்பட்ட பிறகு'' இந்த சர்க்கரை - வெளிக் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி  உறிஞ்சிக் குடித்து பிஸ்கட்டை - மென்மையாக்கி - அதாவது சுவை குன்ற வைத்து விடுகிறது!
-ரொசிட்டா 
அடுத்த வாரக் கேள்வி நாம் ஏன் தூங்குகிறோம்?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com