தகவல்கள் 3

வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிபதி வ.உ.சிக்கு மட்டும்
தகவல்கள் 3

சிறையில்தான் இருப்பேன்!
வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிபதி வ.உ.சிக்கு மட்டும் ஜாமீனில் விடுதலை தர அனுமதித்தார். ஆனால் சுப்பிரமணிய சிவாவைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். உடனே ஜாமீன் விடுதலையை வ.உ.சிதம்பரனார் மறுத்து விட்டார். 
"சுப்பிரமணிய சிவாவுக்கு ஜாமீன் விடுதலை தராததால் நான் வெளியேற மாட்டேன். நானும் சுப்பிரமணிய சிவாவுடன் சிறையில்தான் இருப்பேன்'' என்று வ.உ.சி. திட்டவட்டமாக கூறி சிறையிலேயே இருந்து விட்டார். 
நஜிமா பேகம், டி.ஆர்.பட்டினம்-609606.

வெயில் போதாது!
நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் மூகறிஞர் ராஜாஜி இரயிலில் ஓர் ஆங்கிலேயருடன் பயணம் செய்துகொணடிருந்தார். அது கோடைகாலம். ஆங்கிலேயருக்கு வியர்த்து ஊற்றியது. அவர் ராஜாஜியைப் பார்த்து, "சே!....என்னமாய் வெயில் கொளுத்துகிறது?'' என்றார்.
 "என்ன? வெயில் போதாதா?'' என்றார் ஆங்கிலேயர் அதிர்ச்சியுடன்!
 ராஜாஜி, "இந்த வெயில் போதாது!....உங்களை இந்த நாட்டை விட்டு விரட்டும் அளவிற்கு  வெயில் அடிக்கவில்லையே'' என்றார் ராஜாஜி சிரித்துக்கொண்டே!
என்.நஜிமா பேகம், 
திட்டச்சேரி சாலை, டி.ஆர்.பட்டினம்.

தலைமுறைக்கே நன்மை!
காமராஜரை ஒரு பணக்காரர் சந்தித்துப் பெருந்தொகையைக் கொடுத்து "கட்சிப் பணிக்காக வைத்துக் கொள்ளுங்கள்!''என்றார். 
"உங்கள் பணத்தை நான வாங்கிக் கொண்டால் அது சுயநலமாகிவிடும்!...இந்தப் பணத்தில் உங்கள் ஊரில் ஒரு நல்ல பள்ளிக் கூடம் கட்டுங்கள்....,அது தலைமுறைக்கே நன்மை செய்ததாக இருக்கும்!'' என்றார் காமராஜர்!
தா.சீ.பாலு, கெளரிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com