அங்கிள் ஆன்டெனா

அதிகமாக சேட்டை செய்யும் வீட்டுப் பிள்ளைகளைப் பார்த்து, "பயலுக்குத் தூக்கம் வராதா?' என்று கேட்பார்கள்.
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
நாம் ஏன் தூங்குகிறோம்?
பதில்
அதிகமாக சேட்டை செய்யும் வீட்டுப் பிள்ளைகளைப் பார்த்து, "பயலுக்குத் தூக்கம் வராதா?' என்று கேட்பார்கள்... இதற்கு அர்த்தம் பயல் தூங்கி வழிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ண மல்ல... மாறாக தூக்கம் வந்தாலாவது சேட்டை செய்வதை நிறுத்திவிடுவானா என்ற ஆதங்கத்தில்தான் இப்படிச் சொல்வார்கள்..
தூக்கம் வருவதற்கான சரியான காரணத்தை இன்னும் கண்டுபிடித்தபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  சில பல காரணங்களைச் சொல்லி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யூகித்திருக்கிறார்கள்... அவ்வளவே!
முதல் காரணம்.... அலுப்பு.... உடல் மற்றும் உள்ள உழைப்பினால் வரும் சோர்வினால் தூக்கம் வருகிறது.
மூளை, அன்றாடம் பலவித வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறது. நாம் சந்திக்கும், பார்க்கும், கவனிக்கும், உணரும் அத்தனையையும் மூளை பதிவு செய்துகொண்டே இருக்கிறது. இந்தப் பதிவினால்தான் நாம் மீண்டும் நமக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க முடிகிறது.
மூளை இரவில் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு, தினசரி நிகழ்வுகளை அசை போட்டுப் பார்த்து, வேண்டியவற்றை உறுதியாக நிலை நிறுத்திக் கொள்கிறது. வேண்டாதவற்றை ஒதுக்கித் தள்ளி விடுகிறது. இந்த வேலையைச் செய்வதற்கு மூளைக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது.  அதற்காகத்தான் இந்தத் தூக்கம்!
-ரொசிட்டா 
அடுத்த வாரக் கேள்வி
பனிக்கட்டி அல்லது ஐஸ்கட்டி ஏன் நீரில் மிதக்கிறது?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com