கடி

என்னது? உங்கப்பாவுக்கு உன் திறமை மேலே நம்பிக்கையில்லியா?''"ஆமாண்டா...,என் பிராக்ரஸ் ரிப்போர்ட்டை பார்த்துட்டு
கடி

• "என்னது? உங்கப்பாவுக்கு உன் திறமை மேலே நம்பிக்கையில்லியா?''
"ஆமாண்டா...,என் பிராக்ரஸ் ரிப்போர்ட்டை பார்த்துட்டு, "உனக்கு பக்கத்தில் உட்கார்ந்து எழுதினவன் படிப்பில் மகா கெட்டிக்காரனாடா?' ன்னு விசாரிக்கிறாரே...''
எஸ்.ஜெயஸ்ரீ, ஸ்ரீரங்கம்.

• "டேய்!....,மரத்துமேலே ஏறாதேடா..., சார் பார்த்துட்டார்னா பெஞ்சு மேலே ஏறச் சொல்லுவார்!''
"அதென்னடா பெரிய பிரமாதம்!....,மரத்தை விடவா பெஞ்சு உயரம்?''
உ.உமர் ஃபாரூக், 116/63, கல்வத்து நாயகம் தெரு, கடைய நல்லூர்-627751.

• "வியாபாரம் நொடிச்சுத் தலைகீழா ஆயிடுச்சு''
"என்ன சொல்றே?''
"முன்னால வைர வியாபாரம் செய்தேன்...., இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்''
எம்.ஏ.நிவேதா, அசூர்.

• "நூத்துக்கு நூறு மார்க் வாங்கினா அது "அக் மார்க்!''
"சைபர் வாங்கினா?''
"எக் மார்க்!...''
ஏ.நாகராஜன், சென்னை.

• "ஏம்மா உனக்கு தலையிலே அங்கங்கே வெள்ளை முடி வருது?''
"எல்லாம் உன்னாலதான்...,நீ ஒவ்வொரு தடவை அடம் பிடிக்கறபோதும் எனக்கு ஒரு வெள்ளை முடி வளரும்!''
"அப்போ பாட்டி தலைமுடியெல்லாம் வெள்ளையா இருக்கே அதெப்படி?''
தீ.அசோகன், 
18/13, நடராஜ தோட்டம், 
முதல் தெரு, 
திருவொற்றியூர், சென்னை-600019.

• "சிங்கத்தைப் பார்த்து பயப்படாத மிருகம் எது சொல்லு...''
"இது தெரியாதா....,இன்னொரு சிங்கம்!''
டி.என்.ரங்கநாதன், திருச்சி.

வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக்  குறியிட்ட   2 கடிகளும்  பட்டுக்கோட்டை  ரூபி  ரெடிமேட்ஸ்  வழங்கும் 
தலா ஒரு  டி-சர்ட்டைப் பெறுகின்றன.  பரிசு  பெற்றவர்களுக்கு  வாழ்த்துகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com