முத்திரை பதித்த முன்னோடிகள்! ருக்மிணி தேவி அருண்டேல்

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே
முத்திரை பதித்த முன்னோடிகள்! ருக்மிணி தேவி அருண்டேல்

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
அது 1977-ஆம் ஆண்டு. அந்நாளைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது திடீரென்று காலமானார். அந்நாளைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் தமிழகத்தைச் சேர்ந்த இவரை குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். ஆனால் நாட்டியத்தின் மீதுள்ள தீவிரப் பற்றால் அவர் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அவர்தான் ருக்மிணி தேவி அருண்டேல் ஆவார்.
20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நாம் இன்று "பரதநாட்டியம்' என்று அழைக்கும் நடனக்கலை "சதிராட்டம்' என்று அழைக்கப்பட்டது. மேலும் அக்கலையை தேவதாசிகள் என்ற தனிப்பிரிவினர் மட்டுமே பயில்வர். சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஒருவருக்கும் இக்கலையைப் பயில அனுமதி இல்லை. அவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் சமூக அளவில் இக்கலையைப் பயில்வதையும், ஆடுவதையும் அவமானமாகக் கருதினர்.
இந்நிலையை முற்றிலுமாக மாற்றியவர் ருக்மிணி தேவி அருண்டேல் ஆவார். மதுரையில் 29.2.1904-ஆம் ஆண்டு நீலகண்ட சாஸ்திரி, சேஷம்மாள் தம்பதியின் மகளாகப் பிறந்தார் ருக்மிணி. சமஸ்கிருதத்தில் பெரும் புலமை பெற்றிருந்த இவரது தந்தை சென்னை தியாஸôபிக்கல் சொûஸட்டியின் கொள்கையைப் பின்பற்றுபவராக விளங்கினார்.
அன்னிபெசன்ட் அம்மையாருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு ருக்மிணிக்குக் கிட்டியது. பெண்களின் உரிமை, பெண்கள் தாம் செய்ய விரும்புவதைச் செய்யும் துணிச்சல் மற்றும் சுதந்திரம் ஆகிய அவரது முற்போக்கு சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டார்.
அன்னிபெசன்ட் அம்மையாரின் உதவியாளராகிய ஜார்ஜ் அருண்டேல் என்பவரை 1920-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் தன் கணவருடன் பல வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவிற்கு ஒரு கப்பலில் பயணம் செய்யும்பொழுது "அன்னா பாவ்லோவா' (Anna Pavlova) என்ற பாலே நடனக் கலைஞரைக் கண்டு அவரது நடனத்தால் பெரிதும் கவரப்பட்டார். அவரிடம் பாலே நடனம் கற்றுக்கொள்ள முயற்சி செய்தார். அன்னா உங்கள் நாட்டு பாரம்பரிய நடனத்தைக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்தியா திரும்பிய ருக்மிணி அவரது அறிவுரைப்படி பரத நாட்டியத்தைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.
சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களும் பரதம் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், சமூகக் கட்டுப்பாடுகள் அவர்களைத் தடுக்கின்றன என்பதை உணர்ந்த ருக்மிணி இந்நிலையை மாற்ற முடிவு செய்தார். அதன்படி "பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை' என்ற ஆசிரியரிடம் பரதம் பயின்றார்.
1935-ஆம் ஆண்டு தியோஸôபிக்கல் சொûஸட்டியில் நடைபெற்ற விழா ஒன்றில் தனது முதல் நடனத்தை அரங்கேற்றினார். இவரது முயற்சியால் குடும்பப் பெண்கள் பலரும் நடனம் கற்க முன் வந்தனர். ஆனால் ஆண் ஒருவரிடம் நடனம் கற்கத் தயங்கினர். இத்தகைய பெண்களுக்குப் பாதுகாப்பான முறையில் பயிற்சி அளிக்கவும், இசைக் கலையை வளர்க்கவும் சென்னை திருவான்மியூரில் "கலாúக்ஷத்திரா' என்ற குருகுலப் பள்ளி ஒன்றைத் துவக்கினார். தானே அவர்களுக்கு ஆசிரியராகவும் திகழ்ந்தார். பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த அவர் பள்ளி ஒன்றையும் அங்கு நிறுவினார்.
நடனத்தில் மட்டுமல்லாது நடனக் கலைஞர்கள் அணியும் ஆடை அணிகலன்களிலும் புதுமையைப் புகுத்தினார். இந்தியாவின் பாரம்பரியப் பருத்தி
புடவைகளை நெய்ய மற்றும் இயற்கை வண்ணமேற்றப் பயிற்சி மையம் ஒன்றை உருவாக்கினார்.
தற்பொழுது மிகச் சிறந்த நடனக் கலைஞர்களாக விளங்கி வரும் பலரும் ருக்மிணி தேவியிடம் பயிற்சி பெறும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவர். அழியும் நிலையில் இருந்த கலைக்குப் புத்துயிர் ஊட்டியமைக்காக இவருக்கு 1956-ஆம் ஆண்டு "பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது. 1967-ஆம் ஆண்டு "சங்கீத நாடக அகாடெமி விருது' வழங்கப்பட்டது.
ருக்மிணி விலங்குகளை மிகவும் நேசித்தார். மனிதர்களின் தொந்தரவு இல்லையெனில் காட்டு விலங்குகளும் சாதுவானவையே என்றார். விலங்குகள் நல வாரியத்தின் முதன்மைச் செயலராகப் பணி புரிந்தார். 1952-ஆம் ஆண்டு இவரது பெரு முயற்சியால் "விலங்குகள் வன்கொடுமைச் சட்டம்' (Prevention of cruelty to Animals act 1952) இயற்றப்பட்டது.
2013-ஆம் ஆண்டு ருக்மிணி தேவி நினைவு விழா நடைபெற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். துவக்க விழாவில் சொற்பொழிவாற்றிய அவர் நாட்டியத்தின் மீதுள்ள பற்றால் ருக்மிணி தேவி குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்த நிகழ்வை மனநெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
ருக்மிணி தேவி பல வெளிநாடுகளுக்கும் சென்று பரதக் கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார். இதன் காரணமாக வெளிநாட்டினர் பலர் இக்கலையைக் கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றும்கூட கலாúக்ஷத்திராவில் வெளிநாட்டினர் பலரை நாம் காணலாம். இம் மாபெரும் நடன மேதை 24.2.1986 அன்று இயற்கை எய்தினார்.

அறிந்து கொள்வோம் வாருங்கள்:
1. இசை, நடனம் ஆகிய இரு கலைகளை மேம்படுத்தவும், புத்துயிர் ஊட்டவும் "கலாúக்ஷத்திரா' என்ற குருகுலப் பள்ளி 1936-ஆம் ஆண்டு ருக்மிணி தேவி மற்றும்
அவரது கணவர் ஜார்ஜ் அருண்டேல் ஆகிய இருவராலும் தோற்றுவிக்கப்பட்டது.
2. கலாúக்ஷத்திரா வளாகத்தினுள் இரு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
3. "கூத்தம்பலம்' என்ற உள் அரங்கமும், "ருக்மிணி அரங்கம்' என்ற வெளி அரங்கமும் இங்கு உள்ளன.
4. ருக்மிணி தேவியால் பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் (Rukmini Devi Museum) ஒன்றும் இவ்வளாகத்தினுள் செயல்பட்டு வருகின்றது.
5. பல்வேறு வெளிநாட்டினர் கடந்த அறுபது ஆண்டு காலமாக இங்கு தங்கி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்களின் திறமையை மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் வாரம்தோறும் இசை, நடன நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுகின்றன.
6. உலகம் முழுவதிலும் வசிக்கும் நடனக் கலைஞர்கள் (அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்) தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் கலாúக்ஷத்திராவிற்கு வருகை புரிவதையும், அங்கு நடனமாடுவதையும் பெரும் பேறாகக் கருதுகின்றனர்.
7. இவ்வளாகத்தினுள் செயல்பட்டு வரும் "கைவினைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்' (The
Craft and Research  Centre) தென்னிந்தியப் பாரம்பரிய வடிவங்களையும், வண்ணங்களையும் கொண்ட புடவைகளை நெய்வதில் புகழ் வாய்ந்தது.

என். லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com