ஓட்டுனரில்லா சுரங்க ரயில்!

பெய்ஜிங்கில் ஓட்டுனரில்லா சுரங்க ரயில் நடப்பு ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஓட்டுனரில்லா சுரங்க ரயில்!

சீனாவில் இந்த ஆண்டு ஓட்டுனரில்லா சுரங்க ரயில் அறிமுகமாக உள்ளது. 
பெய்ஜிங்கில் ஓட்டுனரில்லா சுரங்க ரயில் நடப்பு ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
16.6 கிலோ மீட்டர் யங்ஃபங் சுரங்கப் பாதையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பெய்ஜிங்கின் தென்மேற்கு புறநகர் பகுதியான சேவையால் பயன் பெறுவர். 
சீனாவில் முதன் முதலாக ஓட்டுனரில்லா சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்து முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 
தலைநகர் பெய்ஜிங்கில் தற்போது 574 கிலோமீட்டர் போக்குவரத்துக்கு 19 ரயில் பாதைகள் உள்ளன. 350 கிலோ மீட்டர் போக்குவரத்துக்கு 20 சுரங்க ரயில் பாதைகள் நடப்பு ஆண்டில் கட்டமைக்கப்பட உள்ளன. 

சீனாவின் சாதனையில் அதிவேக புல்லட் ரயில்!
உலகின் அதிவேக புல்லட் ரயிலை சீன ரயில்வேத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து அந்நாட்டின் வணிகத் தலைநகரமான ஷாங்காய் நகருக்கு இடையேயான 1,250 கி.மீ. தூரத்தை நான்கு மணி நேரத்தில் இந்த புல்லட் ரயில் கடந்து சென்றது. உலகில் ஓடிக்கொண்டிருக்கும் புல்லட் ரயில்களிலேயே மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயில் இது ஒன்றுதான்! இதற்கு "புக்ஸின் புல்லட் ட்ரெயின்' (ஊமலஐசஎ ஆமககஉப பதஅஐச) எனப் பெயரிட்டுள்ளனர். இது செல்லும்போது வழியில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு தானாகவே நின்று விடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com